அகம் என்ற சொல்லுக்கு மனம், வீடு, இடம் என்பன பொருளென்று ஆசிரியன்மார் கூறுவர். பல்கலைக்கழகப் பேரகராதி பலபொருள் கூறும்.
அவை கீழே தரப்பட்டுள்ளன.
அகத்தியர்: சொல்லமைப்பினைக் காண்போம்.
அகத்து. ~ வீட்டில்.
இயர் (இ + அர்): இவற்றில், இ = இங்கு. இருப்பவர்.
அர் என்பது பலர்பால் விகுதி. அவரென்பது.
அகம் என்பது நாட்டையும் குறிக்கும். எடுத்துக்காட்டு: தமிழகம். என்றால் தமிழ்நாடு. இதைப் பல்கலைக் கழக அகராதி குறிக்கவில்லை.
அகம் என்ற சொல்லை ஆராய்வோம். முன் யாம் எழுதியுள்ளோம். இப்போது தேடிப்பார்க்கவில்லை. பழையதையெல்லாம் தேடிக்கொண்டிருக்க நேரம் போதாது.
அகம்:
அ = அங்கு. (சுட்டுச்சொல்).
கு = சேருமிடம் குறிக்கும் சொல். ஒரு இறுதிநிலை அல்லது விகுதி.
அம் = விகுதி.
அ+கு+அம் = அகம்.
அங்கு அல்லது அடுத்து அல்லது உடனிருப்பதாகிய மனம்; மனை;
உட்புறம்.
இந்தப் பழஞ்சொல் நன்கு அமைந்த சொல்.
ஆக, அகத்தியர் என்பது பெயர்ப்படி பார்த்தால், உள்நாட்டுக்காரர்;
நாட்டவர் (தமிழ் நாட்டுக்காரர்).
அ மற்றும் இ என்ற இரண்டு சுட்டுச்சொற்களும் இருத்தலால், அங்கிருந்து இங்கு வந்தவர் என்று நீங்கள் சொன்னால் அதற்கும் சொல்
இடந்தரும்,
எனினும் "அகம்" என்ற முழுச்சொல், உள் என்றே பொருள்படுதலால்
அவர் உள் நாட்டுக்காரர் என்று முடிப்பதே இயல்பான பொருள் என்னலாம். ஆனால் அகத்தியர் கதை வேறுபடுகிறது.
அகம் = மனம் எனின் மனத்தால் எதையும் சாதித்தவர் என்று பொருள்
கூறலாம்.
அகத்தியர் என்ற தமிழ்ச்சொல் வேறு. அகஸ்தியர் என்பது வேறு. அகத்தியர் தமிழிலக்கணம் பாடினார் என்பர். அகஸ்தியர் வேதங்களில் வருபவர்.
இவர்களின் வரலாறுகள் குழம்பி அறிதற்கு இடர்தருவனவாய் அமைந்துவிட்டன போலும்.
அகமென்பது ஆகமென்று மாறியும் பொருள்மாறாது வருதல்
உண்டெனக் கொள்க. இது ஆகம் என்ற நெடிற்சொல்லின் வேறானதாம்.
-------------------------------------------------------------------
1 akam 01 1. inside; 2. mind; 3. sexual pleasure; 4. breast; 5. agricultural tract; 6. house; 7. place; 8. ether; 9. love-theme; 10. being subordinate; 11. an authology of love-lyrics -> akanAn2URu part a loc. ending
2 akam 02 -> aKkam 01
3 akam 03 1. tree; 2. panicled babul -> velvEl ; 3. mountain
4 akam 04 1. sin; 2. impurity, pollution
5 akam 05 1. i, self; 2. egotism; 3. soul
6 Akam 1. body; 2. breast; 3. mind, heart
7 akam 01 1. personal faults, as attachment, hatred, etc; 2. that which is bad; evil (TLS)
8 akam 02 sulphur (TLS)
9 Akam calabash (TLS)