புதன், 22 பிப்ரவரி, 2017

Corruption in a politician

Like a little white flower,
Blooming on the slopes of an
Inaccessible intractable mountain;
Like cold, clean and sweet water
Flowing straight but  
Along the curves in the stream
With music to our ears, downtown;
Untouched and unpolluted:
So should a politician be at all times.
Uncorrupted; incorruptible.



செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

இரகசியம்

இரகசியம் என்ற சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.  இதன் இடுகை
இங்கு அழிக்கப்பட்டு இருந்தாலும், முன் இணைய தளங்களிலும் இதைப்
பற்றி உரைத்துள்ளோம்.

இரு +  அகம் + சி + அம் ‍= இரகசியம் ஆகும்

ஓன்Ru  அறியப்பட்டு மனத்துள்ளே இருந்தால் அதுவே இரகசியம் ஆகும்
இச்சொல்லில்  சி, அம் என்பன விகுதிகள்.

ஒன்றுக்கு மேற்பட்ட விகுதிகளைக் கொண்டு சொற்களைப் படைத்தல்
பெருவழக்கு ஆகும். பிற்காலத்து இவ்வழக்கு விரிவடைந்தது.

இது பற்றி எழுதப்பட்ட முன் இடுகைகள் அழிந்தன.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

VINAYAKAN விநாயகன்

விநாயகன்

2005 வாக்கில் விளக்கி எழுதியிருந்தேன். அதையே சில‌
ஆண்டுகட்குமுன் இங்கும் மறுபதிவு செய்தேன். பின்னது
இங்கு எதிரிகளால்  அழிக்கப்பட்டது.

வி+நாயகன் என்று  பிரிக்காமல், வினை+ ஆயகன் என்று
பிரிக்கவேண்டும். அப்படிச் செய்தால், வினைகளை ஆய்ந்து
(களைவோன்) என்னும் பொருள் கிட்டும். வினாயகன்
தமிழிலிருந்து செய்யப்பட்ட சொல். வி+ நாயகன் எனினும்
வி = விழுமிய, நய+ அகன் = நாயகன் எனத் தமிழாகும்.

வினாயகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்று
அறிஞர் சிலர் தெரிவிக்கின்றனர். புத்த மதத்திலிருந்து இந்து சமயத்துக்குத் தாவியது என்பர். கணங்களின் அதிபதி என்ற மற்றொரு
குறிப்பும் உள்ளது.  கணம் என்ற சொல், கண் ‍: இடம் என்ற பொருளுடையதாகும், இப்பெயர்கள் கணபதி அல்லது வினாயகனுக்குத்
தமிழில் ஏற்பட்டவையாதல் வேண்டும், இந்த ஆய்வுக்குள் நாம்
செல்லவில்லை. இவற்றை அவ்வந்நூல்களில் கண்டுமகிழ்க.

சங்கச் செய்யுள்களுக்கும்  மதங்களுக்கும்  தொடர்பு இல்லை. மன்னனிடம் பரிசில் பெற நினைக்கும் ஒரு புலவன், அரசன் முன்னிலையில் மதத்தை எடுத்து விளக்க இயலாது.  மதம்பற்றிப் புலவர்க்குத் தெரிந்தது மன்னனுக்கும் தெரிந்திருக்கவேண்டுமே! அதற்கு அரசு துறந்திருந்த இளங்கோ அடிகள் முன் சாத்தனார் போலும் புலவரே பொருந்துவார். Such a situation did not prevail in the Sangam.  This is why Sangam poems seldom had any references to spiritual matters. சங்கத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் விநாயகர் வழபடப்பட்டாரா இல்லையா என்பதற்குச் சங்கச் செய்யுள்கள் சான்றுகள்  ஆகமாட்டா. மொட்டைத் தலை வேறு, முழங்கால் வேறு.  

edited
அறிக மகிழ்க.