சரிதானா சொல்வதெலாம் சாமீ நீங்கள்
சண்டையில்தான் பெரும்பாலோர் சாவார் என்றீர்.
அறியீரோ மாமிசமே ஆகும் தேகத்
தரிதான காப்புணவென் றயின்றார் பல்லோர்.
மாதமாறு மோதலின்றி வீரர் மாண்டார்
மாரடைப்புக் கூரலகால் மாநி லத்தில்!
சாதல்குறைத் தாதலுக்கே காய்கள் மிக்கச்
சைவஉண விகத்தினிலே சரியென் பீரே.
tmdate
அரும்பொருள்
அயின்றார் --- உண்டார்.
மாமிசம் ---- இறைச்சி .
மா= விலங்கு . மிசைதல் = உண்ணுதல். ஆக மா+மிசை +அம் = மாமிசம்.
இதில் ஐகாரம் கெட்டுப் புணர்ந்தது. "விலங்குணவு "