ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மரியாதை

மரியாதை  என்பது முன் விள க்கப்பட்ட சொல் .  அழிந்தது.

மரு +  யா  +  தை .

சுருக்கமாக:

மரு   = மருவுதல். கட்டிப் பிடித்தல்.

யா = யாத்தல்.  கட்டுதல்.

தை   விகுதி .

ரு   என்பது யாவின் முன் ரி ஆகும்.

ஒருவனைப்  பணிவின்  காரணமாகத் தழுவிக்கொள்ளுதல்.

ஒரே பாலார் தமக்குள் மருவிக்கொள்ளுதலே இங்கு குறிப்பது.   இது பின்பு
பொதுவான பணிவு குறிக்கப் பொருள் விரிந்தது.

இது முன் யாம் எழுதிய இடுகையின் சாரம் .

மருவி யாத்துக்கொள்ளுதல் மரியாதை.

மருவுதல்  உடற் செய்கையையும் யாத்தல் தம்மில் ஒருவராய் ஏற்றலையும்
குறித்தன. யாகம் : மனிதனையும் இறைவனையும் கட்டும் சமய நிகழ்வு,  கட்டுதல் -  சேர்த்தல்.

பேச்சில் மருவாதை என்பர்/


சமம் > சமன்

அம் அடிச்சொல்.

அம் > அமை.
அம் > தம்.

தம்முடன் இருப்போன், தம்முடன் அமையத்தக்கவன், ஒன்றாக‌
இருக்கக்கூடியவன்.  அதனால் அம் என்பதிலிருந்து தம் தோன்றியது.

தம்முடன் கலந்திருப்போன், தம்முடன் சமமாக இருப்பவன். ஆகவே
தம் என்பதிலிருந்து சம் > சமம் என்ற கருத்துகள் தோன்றின.

தம் > சம் > சமம்.

அமை > சமை.

அமைத்தல் > சமைத்தல்.

அமையாதன  ஒன்றாக்கிச் சமைத்தலாகாது.

சமம் > சமன்.  திறம் > திறன் போல.

இங்ஙனம், சமம், சமன் என்பன தமிழ்ச்சொற்கள். இதில் ஐயம்
உறுநர் உணராதோர்.

சம் தம் -மிலிருந்து வந்த கதை.

பல "தன்கள்" ஒன்றாக நின்றால் "தம்" என்பது தமிழ்மொழி

அவன் தன் தொழுகையைத் துவங்கினான் என்பது எல்லாம் ஒருமை. அதையே பன்மையில் மாற்றுவதானால் 

அவர் தம் தொழுகையைத் துவங்கினார்

எனல் வேண்டும்

அகத்தியர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் இல்லாத பணிவு (மரியாதை)ப் பன்மை இப்போது இருப்பதால் "கள்" சேர்த்துக்கொள்ள வேண்டியதாகிறது.

"கள் "  இல்லாமல்  பன்மையை உணர்த்தப்  பாருங்கள் .

இப்போது பலரும் விரும்புவது:  "தங்கள் " என்னும் வடிவம்.

தாம்  > தம் .
தாங்கள்  >  தங்கள். 

தம் இன்னும் பன்மையாக நம்மிடம் இருக்கிறது. அது கூட்டு என்பதைக்
குறிக்கிறது. அதுவே "சம்" என்று மாறி மனிதர் கூட்டைக் குறியாமல்
பொதுவாக கூட்டு என்று பொருள்படும் அடிச்சொல்லாக மாறி
இந்தோ ஐரோப்பிய மொழிகள் உள்பட பலவற்றையும் வளப்படுத்தியதே
உண்மை.


இதை மேற்கொண்டு பின் ஆய்வோம்.

தம் தாம் என்பன எங்கிருந்து வந்தன?

சம்  தம் -மிலிருந்து வந்த கதை.