ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சமம் > சமன்

அம் அடிச்சொல்.

அம் > அமை.
அம் > தம்.

தம்முடன் இருப்போன், தம்முடன் அமையத்தக்கவன், ஒன்றாக‌
இருக்கக்கூடியவன்.  அதனால் அம் என்பதிலிருந்து தம் தோன்றியது.

தம்முடன் கலந்திருப்போன், தம்முடன் சமமாக இருப்பவன். ஆகவே
தம் என்பதிலிருந்து சம் > சமம் என்ற கருத்துகள் தோன்றின.

தம் > சம் > சமம்.

அமை > சமை.

அமைத்தல் > சமைத்தல்.

அமையாதன  ஒன்றாக்கிச் சமைத்தலாகாது.

சமம் > சமன்.  திறம் > திறன் போல.

இங்ஙனம், சமம், சமன் என்பன தமிழ்ச்சொற்கள். இதில் ஐயம்
உறுநர் உணராதோர்.

சம் தம் -மிலிருந்து வந்த கதை.

பல "தன்கள்" ஒன்றாக நின்றால் "தம்" என்பது தமிழ்மொழி

அவன் தன் தொழுகையைத் துவங்கினான் என்பது எல்லாம் ஒருமை. அதையே பன்மையில் மாற்றுவதானால் 

அவர் தம் தொழுகையைத் துவங்கினார்

எனல் வேண்டும்

அகத்தியர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் இல்லாத பணிவு (மரியாதை)ப் பன்மை இப்போது இருப்பதால் "கள்" சேர்த்துக்கொள்ள வேண்டியதாகிறது.

"கள் "  இல்லாமல்  பன்மையை உணர்த்தப்  பாருங்கள் .

இப்போது பலரும் விரும்புவது:  "தங்கள் " என்னும் வடிவம்.

தாம்  > தம் .
தாங்கள்  >  தங்கள். 

தம் இன்னும் பன்மையாக நம்மிடம் இருக்கிறது. அது கூட்டு என்பதைக்
குறிக்கிறது. அதுவே "சம்" என்று மாறி மனிதர் கூட்டைக் குறியாமல்
பொதுவாக கூட்டு என்று பொருள்படும் அடிச்சொல்லாக மாறி
இந்தோ ஐரோப்பிய மொழிகள் உள்பட பலவற்றையும் வளப்படுத்தியதே
உண்மை.


இதை மேற்கொண்டு பின் ஆய்வோம்.

தம் தாம் என்பன எங்கிருந்து வந்தன?

சம்  தம் -மிலிருந்து வந்த கதை.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

தீயானியைத்தல் தியானம்

தியானம்  என்பது ஒரு குறித்த பொருளின்மேல் மனத்தை நிலைநிறுத்துதல் ஆகும். அப்பொருள் இறைவனாகவே
பெரும்பாலும் இருக்கும்.

இதற்கு இடையில் இன்னொரு பொருளை உதவியாக வைத்துக்கொள்ளலாம். அந்த உதவிப்பொருள், இறைவன்பால் மனம்
செல்லுதலை எளிதாக்குகிறதென்று உணரப்படுகிறது. இடைப்பொருள்
இருக்கலாகது என்பதொரு வாதம். இடைப்பொருள் வைத்து வெற்றி
கண்டோர் உளராதலின், அது இருத்தலாகாது என்பது முற்றிலும்
ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை.

தொடக்கத்தில் இடைப்பொருளாகப் பலரும் தீயையே தேர்ந்தெடுத்தனர்.
ஒரு விளக்கைக் கொளுத்திவைத்து, தீபத்தை நோக்கி, இறைவனை
எண்ணினர். சில மணி நேரம் இப்படி மனம் நிலைநிறுத்தம் பெறவே
தியானம் வெற்றியடைந்ததாகக் கொண்டாடினர்.

கோயிலில் விளக்கேற்றும் வழக்கம் இதனாலேயே ஏற்பட்டது. ஓமம்  (தீ )
வளர்த்தும் மனம் ஒருநிலை அடைந்து இன்புற்றனர்.

ஆகவே "தீயான் இயைத்தல்" ஒர் முன்மைக் கொள்கையாய் ஆயிற்று. ஏதேனும் ஒருவகையில் தீயின்றி இறைவணக்கம் நடை
பெற்றது குறைவு.

தீ -  மனத்தை இறையுடன் இயைக்கப் பயன்பட்ட இடைப்பொருள்.
தீயான் இயைத்தல் > தீயானியைத்தல் > தியானித்தல்.
தியானி > தியானம்.

நீரும் பூவும் என வேறு இடைப் பொருள்களும் உள . நீரிலிருந்து  நீராயினன் > நாராயணன் என்பதும் பூ  என்பதிலிருந்து பூசை  (பூஜை)  என்பதும்  ஏற்பட்டன .

தீ யால் =   தீயான்    (  ஆல்  =   ஆன்   வேற்றுமை உருபுகள் )

நிகழ்ந்த திரிபுகள்:

தீயானியைத்தல்  >
தியானியைத்தல்  ( முதல் எழுத்து  குறுகிற்று )
தியானித்தல்  (  யை  கெட்டது ,  அல்லது மறைந்தது ).
தியானி    (  ஒரு வகையில் இது ஒரு போலி வினைச் சொல் )
தியானித்தல்  ( பின் உருவான வினைச்சொல் )
தியானி + அம்  -  தியானம் .(  தொழிற்பெயர் )
தியானம் >  தியான (  பிறமொழித் தாவல் )

இச் சொல் "தீப்"  பொருளை  இழந்து   இதுகாலை பொதுப்
 பொருளில் வழங்குகிறது )

Posted without further elaboration.   This may be in danger of getting deleted externally. Hence we post first.