புதன், 1 பிப்ரவரி, 2017

ஆரோக்கியம்

ஆரோக்கியம்   என்பது தமிழ்தான்    

இது இந்தோ ஐரோப்பியச் சொல் தொகுதிகளில் இல்லாதது.
ஆகவே தமிழ்த் திரிபுச்  சொல்தான்/

இதுபற்றி யாமெழுதியதை இங்குக் காண்க

https://sivamaalaa.blogspot.sg/2014/03/blog-post_8.html

தமிழ்ச் சொற்களை நன்கு அடையாளம் காண இயலாமை நிலவியதால்
பிற மொழிகள் பயனடைந்தன என்பதே உண்மை , 

ஆர் > ரு > ர. suffixes plural and plural of respect. Odisha Telugu

வந்தார்   என்ற வினைமுற்றில் இறுதியில் இருக்கும் விகுதி
ஆர் என்பது.

பிறமொழிப் பேச்சுகளில்,  வந்தார் என்பது வந்தாரு என்றும் வந்தார‌
(இறுதிக் குறில் ரகரம்)  என்றும் திரிதல் காணலாம்.

ஆகவே. ஆர் > ரு > ர.

தமிழ்ச்சொற்கள் தலைபோய் வழங்குதல் இம்மொழிகளின் இயல்பு
ஆதலின், இத்திரிபுகளில் வியக்க எதுவுமில்லை.

தெலுங்கு, ஒடிஷா மொழிகளைக் கூர்ந்து செவிமடுக்க.

அம்மொழிகளில் ர  ரு என்பன விகுதிகள் என்பதில் ஐயமில்லை.

இத்திரிபுகள் சங்கதத்தினுடன் தொடர்பு  அற்றவை .

These have been confirmed by Linguistic studies.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஒலி ஏதும் செய்யாமல்

ஒலி ஏதும் செய்யாமல் உள்ளேவந்து
உகந்தனவாம்  எவையென்று கண்காணித்து
நெளிவொன்றும் இல்லாமல் அழித்துவிட்டு
நேர்பட்ட  கருத்துகளை  வாரிக்கொண்டார்
மலிவாகத் தம்பெயரைத் தூக்கி ஏற்றும்
மதிமிக்க வழியொன்றைக் கண்டுகொண்டார்
இழிவான இச்செயலை நிறுத்திக்கொள்வீர்
இன்றமிழ்க்கு நண்பரென வாழ்தல் செய்வீர்