வெள்ளி, 20 ஜனவரி, 2017

சொல்: சாபlல்லியம், சபலம்

.
மனமானது, பலவற்றிலும் ஈர்ப்பசைவு கொள்ளாது, நிலை நிறுத்தப்படுதல் வேண்டும். ஒன்றன்பால் மனம் அசைவு கொள்ளுமாயின் அது ஆசை எனப்பட்டது.  அசை > ஆசை.

சுடு> சூடு என்று முதலெழுத்து நீண்டு வினைச்சொல், பெயரானது போல.

மனம் பலவற்றிலும் சார்ந்து இயங்குமாயின் அது "சா(ர்)+ பல்+இயம். 
சாபல்லியம் என்பது காதுக்கு நன்றாகவே உள்ளதெனினும், சற்று நீண்டுவிட்டது போல் தோன்றவில்லையா? ஆகவே மேலும் சிந்தித்தனர். சா என்பதை ச (குறிலாகக்) குறுக்கினர். இயம் என்பதை அகற்றிவிட்ட நிலையில், அதற்குப் பதிலாக அம் என்ற விகுதி மட்டும் சேர்த்தனர். இப்போது ச+ பல் + அம் = சபலம் ஆனது. பலவற்றிலும் மனம்தாவும் புத்தி என்று பொருள்.

இதில் சார்(தல்) என்பது ச என்று குறுகி உருத்தெரியாமல் கிடக்கிறது, மற்றவை இயல்பாக நின்றன,

நம்மனோர் சொல்லமைப்பில் புயல்போன்றோர்.

சார்  > சா > ச .

வெளிப்படை இல்லாத சொற்குறுக்கம் :"  சபலம்" .

Note: There was an internet outage at the time this was being edited. Will review.
Now 0107 08062021

வியாழன், 19 ஜனவரி, 2017

அவசரச் சட்டம் Jallikattu

மோடிப் பெரியவர் முடியா தென்று சொல்லிய படியாலே
கூடிச் பேசிச் சட்டம றிந்தவர் தம்முடன் மன்றினிலே
நாடி அவசரச் சட்டம் இயற்றிச் சல்லிக் கட்டினையே
ஏடுகள் போற்ற நடத்துதல் ஒன்றே செல்வழி தோன்றிடுதே.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

கவலை தைப்பொங்கல்

பண்பாட்டின் முன்கூறாய்த் தழுவும் ஏறு
பைந்தமிழர் தைப்பொங்கல் வழுவி டாத‌
கண்தேடும்  நிகழ்வாக நடத்திப் போற்றும்
கலைமாணாக் கர்தம்பால் கடுமை காட்டி
விண்கீர்த்தி மண்மேலே விளைக்கும் காட்சி
விரிந்தஒளி பரப்பாலே அறிந்த காலை
உண்ணீரும் வறங்கூர்ந்த துன்பி னோடின் .
னொருதுன்பம் சேர்ந்திட்ட கவலை நொந்தேன்


கண் தேடும் =  எல்லோரும் காண விழையும் 

விண்கீர்த்தி மண் =  விண்ணளவு கீர்த்தியுடைய‌
மண், அதாவது தமிழ்நாடு.


வறம் கூர்ந்த = வறுமை ஏற்பட்ட‌. வற்றி விட்ட .