வியாழன், 12 ஜனவரி, 2017

Jallikkattui ஜல்லிக்கட்டு

முன் ஜல்லிக்கட்டு பற்றி எழுதியவை:‍=

http://sivamaalaa.blogspot.com/2015/01/maneka-says-jallikattu-western-concept.html

ஆனால் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.  இந்திய உச்ச  நீதிமன்றத் தடை நீடிப்பதாகத் தெரிகிறது.

என் முன்னையக்  கவிதை இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

http://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_0.html

பழமை  விளையாட்டுக்குப்  புதுமைச்  சட்டங்கள்  குறுக்கே நிற்கின்றன .

தடை விலகுமா ?


புதன், 11 ஜனவரி, 2017

வதம் என்ற சொல்லை.....................

இப்போது வதம் என்ற சொல்லை ஆராயலாம்.

இதற்குரிய வினைச்சொல் "வதைத்தல்" என்பது.

வதைத்தல் ‍: கொல்லுதல் என்பது பொருள்.

வதை + அம் = வதம் என்றாகும்.  இதில் ஐகாரம் ஒழிந்தது.

வதை + அம் = வத் + அம் = வதம்.
அதாவது, வத்+ஐ = என்பதில் ஐ கெட்டது.

இது வறு > வறுத்தல் என்பதனோடு தொடர்புடையது.

வறு > வற்று ;  இது பேச்சு வழக்கில் வத்து என்று வழங்கும்.

வற்றுவதாவது, நீர் இல்லாமல் ஆவது.
வறுத்தல் என்பது, நெருப்பிலிட்டு நீர் இல்லாலாக்குவது.

வற்று = வத்து;
வற் = வத்.

வற் + அம் = வறம் (வறு+ அம் என்பர் தமிழ் இலக்கண ஆசிரியர்).
வத் + அம் = வதம்.

வறம் என்பது நீர்வற்றி இல்லாமலாகிய நிலை; வறுமையும் ஆம்.
வதம்: நீர் இல்லாமல் போயின்   உயிர்கள் அழியும்; ஆகவே இச்சொல்
கொல்லுதல் பொருளைத் தாவிற்று.

நாட்குறிப்பில் உள்ள சான்று Modiji case

நான் ஒரு குழும்பில் (கம்பெனியில்) பெரியவன், என் குழும்புக்கு வருமான வரி அதிகாரிகள் வருவர் என்று எதிர்பார்க்கிறேன்; அவர்களை இங்கு அனுப்பும் அரசியல் தலைவரை அதனால் எனக்குப் பிடிக்கவில்லை; அவருக்கு ஆப்பு வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது நாட்குறிப்பில் அவருக்குப் பணம் கொடுத்ததாகவும் இன்னும் வேறுபலருக்கும் பணம் கொடுத்ததாகவும் எழுதி வைத்துவிட்டு, மறுவேலைகளைக் கவனிக்கிறேன்.

எதிர்பார்த்ததுபோல, வருமான வரி அதிகாரிகள் வந்து பலவற்றையும்
தேடும்போது அந்த நாட் குறிப்பும் அவர்கள் கையில் சிக்குகிறது. எழுதிய‌
நான் முன்னணியில் நிற்கவில்லை. நான் வெளியில் வந்து எதையும்
சொல்லாவிட்டாலும், நான் சொல்லவிழைந்ததை என் நாட்குறிப்பு
சொல்கிறது.

எனது நாட்குறிப்பு அந்த அரசியல் அதிகாரி ஊழல் புரிந்ததாகப் பொருள்படாது.

சிந்தித்துப் பாருங்கள்: என் நாட்குறிப்பில் நான் எதை வேண்டுமானாலும்
எழுதிவைத்துக்கொள்ளலாமே! நான் வாயால் பொய் அல்லது மெய் சொல்வதற்கும அதை நானே எழுதி என் அறையில் போட்டுவைப்பதற்கும் என்ன‌ வேறுபாடு? என் நாட்குறிப்பை என் நினைவுக்கு உதவியாக நான் வைத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தலாம்.

மற்றபடி அது எப்படிச் சான்றாகும் என்பதை சட்ட நூல்களிலோ ஒரு
வழக்கறிஞரிடமோ  கேட்டறிந்துகொள்ளலாம்.

மேலும் அறிய: :-


http://www.timesnow.tv/india/video/modiji-received-kickbacks-from-sahara-birla-when-he-was-cm-claims-rahul/53282

இதே சட்டம்தான் அமேரிக்கா  இங்கிலாந்து ஏனைக்  காமன்வெல்த் நாடுகளிலும்  பின்பற்றப்படுகிறது.

நாட்குறிப்பில் உள்ள சான்று "கேல்விச்  சான்று "  ( Hearsay Evidene ).