ஞாயிறு, 1 ஜனவரி, 2017

ளகரம் ணகரமாக மாறுதல்.


ஒரு சில சொற்களில் ளகரம் ணகராமாகத் திரியும். இதற்கு நல்ல‌
எடுத்துக்காட்டு: களவாணி என்ற சொல். இதன் இறுதியில் உள்ள‌
வாணி என்பது உண்மையில் வாளி என்ற சொல்லிறுதி ஆகும்.

களவு +ஆள் + இ =  களவாளி  > களவாணி.

இதைக் களவு + ஆணி என்று பிரித்தல் பிழையாகத் தோன்றுகிறது,
களவு செய்யும் ஆண் என்பதனோடு இகரம் சேர்ப்பர்போல் தெரிகிறது


.ளகரம் ணகரமாக மாறுதல்.

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு வாழ்த்துகள்.

மெட்டினிய பாட்டிலே மேலெழும் இன்குரல்போல்
எட்டரிய எல்லாமும் எட்டும் பதினேழில்
யாவர்க்கும் என்றுமெங்கும் இன்பமே பொங்கிடுக‌
தேவமுதாய் மேவ நலம்.

யாவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வியாழன், 29 டிசம்பர், 2016

திராட்சை உருத்திராட்சம் அங்கம்:

ஏறத்தாழ 2008 ‍  ~  2011 வரை எழுதப்பட்ட பல இடுகைகள் கள்ள‌
மென்பொருள் கொண்டு நஞ்சர்களால் அழிக்கப்பட்டன.

நினைவிலுள்ளவற்றில் சில இப்போது:

திராட்சை ‍  இது திரளாகக் காய்ப்பதனால் ஏற்பட்ட பேச்சு வழக்குப்
      பெயர்.  திரள் > திரட்சை (திரள்+சை_ > திராட்சை.

உருத்திராட்சம்:  இது திராட்சைப் பழ வடிவான மணிகளால், கோத்துக் கட்டி, உருப்போடுவதற்கு ( மந்திரம் சொல்வதற்குப்) பயன்படுத்தப்
பட்டதனால் வந்த பெயர்.  உரு + திரட்சை + அம் = உருத்திராட்சம்).

அங்கம்:   இதில் முன் நிற்பது  அம். இது அமைப்பு என்பதன் அடிச்சொல்.  கு+ அம் என்பன விகுதிகள். அங்கம் எனில் அமைக்கப்பட்டது என்று பொருள். அம்> அமை > அமைத்தல்.
அம்> அங்கு> அங்கம்;  அம் > அங்கு > அங்கி.  மூலம் தமிழ் அடிச் சொற்கள்.