திங்கள், 19 டிசம்பர், 2016

காட்டர சென்று

காட்டர சென்று கழறும் குழறுபடி
மீட்டெடுத் தாங்கு மேற்சட்டம் === கூட்டொழுங்கு
நின்று நிலைப்படவே நேரிய செயலமைப்பு
என்றியலும் மன்னோ இனி.

இதை இன்னொரு கவிதையுடன் வாசித்துப் பாருங்கள்.  அது இங்கே:

http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_18.html

இவை இரண்டும் சில மாதங்களுக்கு முன் பாடப்பட்டவை .

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

விண்செலல் துயரதே.


பேறென்று சொல்வன அனைத்தும் பெற்றுத்   தரும்பதி
னாறோடே ஆயிரம் ஈரான இவ்வாண் டிறுதியில்
ஆறோடுங் கண்ணீர் எனும்படி தலைவர் பெரியோர்
வீறாடும் தமிழகம் நீங்கி விண்செலல் துயரதே.

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற

நிறைசுரந்து நிமிர்ந்துநின்ற அரசுபின்னிட=== ‍  இன்று
நிலைதளர்ந்து பலவுழந்த பாவமென்னவோ?
கறைகறந்து முகத்துவீசும் காலம்வந்ததோ === எண்ணக்
கலைவளர்ந்து மலையினுச்சி நிலையுமீளுமோ


இது வேறு நாட்டின் ஒரு மாநில அரசு ஆட்சியின்போது நடைபெற்ற‌
ஒரு நிகழ்வினைப் பற்றி வரைந்த கவி. முன் பதிவு செய்ததாக ஞாபகம்.அதைத் தேடிப்பிடிக்கவில்லை. பல அழிந்துவிட்டபடியால்
எதையும் மறுபதிவு செய்வது வேண்டற்பாலதே. ஒன்றை விடமிகள்
அழிப்பினும் இன்னோரிடத்தில் அது கிடைக்குமே.  அதனால்.