சனி, 17 டிசம்பர், 2016

ஆதங்கம் என்ற சொல்லை...

கொஞ்ச நேரம் உடம்பு வெப்பமடைந்தால், அது தங்காதது. வெப்பம் கூடுதலாகித் தொடருமானால் அது காய்ச்சல் என்கிறோம். ஜுரம் என்று சிலர் சொல்வர்.

ஒரு பாத்திரத்தில் நீரூற்றினால் அது தங்க வேண்டும்.  நீர் வடிந்துவிடுமானால் அது தங்கவில்லை. தங்கி நிற்பதையே கலம்
என்கிறோம்.

மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் தங்கித் துன்புறுத்துகின்றன. தங்கித் துன்பம் தராதது ஒரு துன்பமன்று. ஒரு முறை இருமினால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. தொடர்ந்து இருமல் வருமானால் அது தீமை. தங்கிவிட்ட துன்பம்.

நோயும் நீங்கும்வரை தங்குவதே ஆகும்.

பயம், துக்கம் எல்லாம் தங்கிச் சிலகாலம் துன்புறுத்துபவை.

இவைபோல்வன தங்குவது சில நிமையங்கள் ஆகலாம் . பல வருடங்கள்
ஆகலாம்.  கால அளவு சிறிதாகவோ நீண்டதாகவோ இருக்கலாம்.

இப்போது ஆதங்கம் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

தங்கி நடைபெறுவதே ஆ+தங்கம் = ஆதங்கம் ஆகும்.  ஆ= ஆகுதல்.
தங்கம் என்பது தங்கு அம் ஆகும். அம் என்பது விகுதி.

தங்கி ஆகுவது .

இதன் பொருள்:  ஆபத்து, தொல்லை, கலம், காய்ச்சல், தீமை , நோய் ,அச்சம்  துக்கம்.

இவற்றுள் எதுவும் தங்கினாலே  தொல்லை.  தங்கம் என்ற பகுதிச்சொல்  இதையே தெரிவிக்கிறது. ஆ . தங்கம்.

பொன்  எனும் தங்கம் வேறு. 


வகைகெட்ட வங்கிகளில் புது இரத்தம்?

தலையமைச்சர் மோடி தகைசால்நன் மாந்தர்
நலம்விளைக்கும் அன்னார் நடவடிக்கை என்றாலும்
வங்கிகள் பல்லாற்றான் வக்கறுந்து போனவையே
தங்கிநிற்கும் உள்ளூழல் தன்னிலே தத்தளிக்கும்
புத்துழைப்பு நல்கப் புனிதம் வலிபெறுமோ
செத்த உடலுக்குள் புத்தம் புதுயிரத்தம்
ஒத்தூர்ந்  துயிர்ப்படுமோ  தான்?



http://www.livemint.com/Opinion/uGl7NBV5ePFHffisBJOTjL/How-corrupt-are-our-bankers.html.

http://www.livemint.com/Opinion/uGl7NBV5ePFHffisBJOTjL/How-corrupt-are-our-bankers.html.

காதல் காமம்


காதல் காமம் என்ற சொற்களிலும் கா (காவல்) என்பதே ஆதிப்பொருள்  ஆகும். பிரேமை என்ற இடுகையைப் படிக்க.

http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_75.html

தான் விரும்பிய ஆடவனை, அல்லது பெண்ணை காப்பதனால்
(பிறர் எடுத்துக்கொள்ளாமல்) இச்சொற்கள் இங்ஙனம் அமைந்தன.