ஞாயிறு, 29 மே, 2016

குடு - அடிச்சொல் (குடும்பம் குடி )



kutu -   act of humans joining or things joined or tied together to make another object

குடு > கூடு > கூட்டம்.  (அம்)
குடு > கூடு > கூடை.
குடு > குடம்பை
குடு > குடுமி  hair joined together
குடு > குடலை
குடு > குடி  ( இ )
குடு > குடி > குடிமை
குடு   >  குடும்பம்

You may make an analysis of these terms.

அம்மிக்கும் ஆபத்து?

மின்னரைப்பான்   (mixie or mixer-blender )  இருப்பதனால் இப்போது  அம்மியைப் பற்றி யாரும்  நினைப்பதில்லை .

அம்  -   அம்மு .
அம்  -  அமுக்கு.

இம் என்று ஒலி  எழுப்பும்போதே,  இரண்டு இதழ்களும் ஒன்றை ஒன்று தொட்டு அமுக்கியே  ம்  என்ற ஒலி  எழுகிறது.   எனவே,   ம் >  அம்  <  அம்மு -  அமுக்கு  என்பன மிக்கப் பொருத்தமாகவே  அமைந்த சொற்கள் ஆகும்.

அம்முதல் -   குழவியால்  அம்மியில்  அரைக்கும் பொருளை வைத்து அமுக்கி   அரைத்தல்   ஆகும் .

அம்மி என்பது தொழிற்பெயர்  ஆகும்.  அரைகல்லைக்  குறிக்கும்.

நாளடைவில்  அம்மி  மறக்கப்பட மாட்டாது .  காரணம்  "அம்மி மிதித்து அருந்ததி  பார்"  :க்கும் மரபு  இருக்கிறதன்றோ.  !

அதன்மூலம்  அம்மி வாழ்கிறது.

சுற்றுமசி  (mixie or mixer-blender ) வந்ததனால்  அம்மிக்கு  ஆபத்து   இல்லை  

சொம் - சொத்து - அதன் திரிபுகள்

சொம் சொத்து சொதந்திறம்.


பண்டை நாட்களில் முடியரசு இருந்தது. இப்போது குடியரசு நிலவுகின்றது. முன் மன்னராட்சி. இப்போது பல நாடுகளில் மக்களாட்சி. இப்போது மன்னர்கள் வீற்றிருக்கும் நாடுகளிலும் கூட, அவர்கள் ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகன்று வெறும் அடையாளமாகவே
உள்ளனர். ஓர்  அமைச்சரவை பரிந்துரை செய்வனவற்றை ஆமோத்தித்து (ஆம் ஆம் என்று ஓதிக்கொண்டு ) கையெழுத்திடுவோராக உள்ளனர். தேர்ந்தெடுக்கப் பட்டோரே முடிவுகளைச் செய்ய வல்லார் என்று அரசியல் அமைப்புச் சட்டங்கள் சொல்கின்றன.

மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னனே சொத்துக்களுக்கெல்லாம் அதிபதியாய் இருந்தான். எல்லா அதிகாரங்களையும் தன்னுள்ளே அவன் பதிந்து வைத்துக்கொண்டிருந்ததால் அதி - அதிகாரங்களைப் பதி - பதிந்துவைத்துக் கொண்டவன். அதிபதி. சொத்துக்களை அவன் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொன்டான். அவனுக்கு மனைவிகள் பலர் இருந்தனர்.
முறைப்படிப்  பட்டம் சூடியவள் அரசி. மற்ற அவன் காதலுக்குரிய பெண்கள் மனைவிகளே ஆயினும், அரசியர் அல்லர். அவன் அந்தரங்கம் எல்லாம் அறிவீரோ? அந்த + அரங்கம் ! மன்னனின் மனையாட்டியர் அரங்கம் !. அதுதான் அரங்கம் .--- அந்தரங்கம் . அவர்கள் வாழ்ந்த இடம் - அந்தப் புறம். அரசியல் நடவடிக்கைகளுக்குப் புறமான இடம். அந்தப்புரம் ஆயிற்று அந்த : இது இடக்கர் அடக்கல் பிறகு . அங்குமின்றி இங்குமின்றி இருந்தவர்கள் அந்தரத்தில் இருந்தனர். அந்த அரிய இடம். அந்த+ அரு+ அம். அந்தரம். இதுபின் மேல் நோக்கியும் சென்று வெட்ட வெளியில் உள்ள அந்தர இடத்தையும் குறித்தது. அந்தரம் என்பதற்கு வேறு விளக்கமும் அமையும். புனைவுச் சொற்கள் வேறு பொருள்களிலும் சிலேடையாகவும் போதரும்.

அரசனுக்குப் பிறந்தோர் அவன் பிள்ளைகள். இளவரசுப் பட்டம் . அவன் பட்டத்து இளவரசன்.மற்ற அரசனின் பிள்ளைகள் இளவரசர்கள். இளவரசர் ஆகாதோர் வேறு பல பட்டங்கள், நிலங்கள், பொருள்கள் கொடுக்கப்பட்டனர். அவர்கள் பிள்ளைகள் என வழங்கப் பட்டனர். பிள்ளை என்பது ஒரு பட்டம் ஆயிற்று.

அரசன் கொடுப்பதே சொத்து, சொம்+ தம் = சொந்தம். சொம் + து = சொத்து.
அவர்கள் தம் சொம்முடன் (சொத்துக்களுடன் ) சொம்+ தம்+ திறமா க ( சொதந்திரமாக, இன்றைய வடிவம் சுதந்திரமாக ) -- அதாவது அரசனிடம் இருந்து கிட்டிய சொத்துக்களைத் தம் திறத்திற்கேற்ப
(திறம் காட்டி) நிறுவாகம் செய்து பிழைப்பார் ஆயினர்.

அரசர்கள் இருந்ததும் அவர்களுக்கு பல மனைவியர் இருந்ததும் சொத்துக்கள் இருந்ததும் சொத்துக்கள் பெற்றோர் சொம்+தம்+திறமாகச் செயல் பட்டதும் ஒன்றும் பெரியன  அன்று. இதில் சில சொற்களை விளக்கியுள்ளேன்.
அதைப் புரிந்து கொள்வீர்..பின்னர் வேண்டின் திருத்தப்படும்,.

சொம் சொத்து சொதந்திறம்.