ஊனக் கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே. ( சி போதம் 9)
இங்கிருந்து தொடர்கிறோம் :
http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_17.html
துனை :
ஒன்பதாம் நூற்பாவில் இந்தத் தேர் குறிப்பிடப் படுகிறது. இந்தச் சொல்லில் வரும் துனை என்பது விரைவு என்னும் பொருளுடையது ஆகும்.
துனைதல் என்னும் வினைச்சொல் விரைதலென்னும் பொருட்டாதலின்
துனை என்னும் பகுதி மட்டும் நின்று பெயர்ச்சொல் ஆயினால் அது முதனிலைத் தொழிற்பெயராய் விரைவு என்றே பொருள்தரும்.
உராத்துனைத் தேர்
உரா என்ற சொல்லின் பொருளை அறிவோம். இதன் உறவுச் சொற்களை ஆய்வதன் மூலம் பொருளை எளிதில் கண்டுகொள்ளலாம். அதைப் பின்வருமாறு விளக்கலாம் ,
உர் என்பது அடிச்சொல் . இது உள் என்னும் வினையாக்க விகுதி பெற்றுச் சொல் அமைகின்றது . உர் உள் > உருள். உள் என்பது பெயராக்க விகுதியாகவும் வரும். - வேறு சொற்களில்.
உரு > உருள் > உருளுதல்.
உரு > உருடை ( வண்டிக்கு இன்னொரு சொல்).
உரு > ஊர் . ஊர்தல். (வண்டியில் செல்லுதல்)
உரு > ஊர் > ஊர்தி = வண்டி.( வானூர்தி, வானவூர்தி என்ற
வழக்குகள் காண்க.)
உரு > உரா ( உருளுதல்.)
நில்>. நிலா. கல் >கலா, பல் > பலா (சுளை பல உடையது ) வில்> விலா (ஓர் எலும்பு ) என்பன நோக்குக.
உரா என்பது உருளுதல்; துனை என்பது விரைவு. உராத்துனைத் தேர் எனின் விரைந்து உருளும் தேர்.
தேர்த்து = "தேர் போல்வது" என்னும் பொருட்டு
சக்கரங்களின் விரைவு உருட்சியினால் பாய்ந்தோடி மறைகின்ற தேர்.
இதனால் உராத்துனை என்பது விளக்கப்பட்டது.
பின்பு மறுபார்வை செய்யப்படும் .
Hope your reading is more pleasant after editing and insertion of references.