ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.
இறைப் பற்று முதிர்ச்சி பெற்று புனிதம் அடைந்தவனுக்கு இறைவன்
அன்னியம் இல்லை என்கிறது சிவஞானம்.
தொடக்கத்தில் இறை அன்னியமாய்த் தோன்றும். ஆனால் பற்றுடையான், தாங்கருந் தவம் மேற்கொண்டு செயல்பட அத்தவம் இறைக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருக்கத்தினை அவனுக்கு உணர்த்துகின்றது. அதாவது, ஆன்மாவே சிவம்; சிவமே ஆன்மா என்று உணர்த்துகின்றது. இதில் விழிப்புற்றோன், இரண்டன்மை அறிந்துகொண்டு சிவத்தை நோக்கிப் பயணிக்கின்றான்.
அத்வைதம் என்பது இரண்டன்மை. இறைக்கும் ஆன்மாவுக்கு மிடையில் பாகுபாடின்மை . அன்னியம் இன்மை என்றதும் இதையே ஆகும்
கழல் - சிலம்பு. இங்கு கழல் இறைவன் திருவடிகளைக் குறித்து நின்றது. ஆதலின் ஆகுபெயர். அரன் = சிவம். சிவத்திற்கு உருவும் பாலும் ( ஆண் பெண் என்னும் ....) இன்மையினால் இஃது இங்குக் கவிதை நயம் பொருந்தக் கூறப்படுகிறது. உருவக அணி . சிவத்துடன் ஆன்மா ஒன்றிணையும் என்பதே பொருள் . வீரர்களும் கழலணிவர். பெண்களும் கழலணிவர். சிவன் அம்மையப்பன் ஆதலின் இது பொருத்தமே.
கழல்-.. Anklet given as a token of honour to a warrior; வீரக்கழல். ஒண்பொறிக் கழற்கால் (பதிற் றுப்பத்து . 34, 2). 2. Anklet; சிலம்பு. அறைகழ லரு ளொலி . என்பர் பிறரும் .
இறுக்கமாக இல்லாமல் அணியப்படுதலால் கழல் என்ற பெயர் வந்தது. from: கழலுதல் become loose. .அகரவரிசைகள் தரும்பொருள் மேல் குறித்தோம்.
===================================================
குறிப்பு: "கழல்வளை" என்பது வளையல்களைக் குறிக்கும் Here the word kazal qualifies the word vaLai. This is because vaLai is also an ornament which is loose enough to be comfortable at wear.
வீரகண்டாமணி - வீரத்தினறிகுறியாய் அணியும் கழல்.