விட்டுவிட்டுப் பெய்தமழை நீர்த்துளிகாள்
எனைத் தொட்டுதொட்டு நீங்கி நின்ற இன்பக்கைகாள்.
வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்! நானும்
தூண்டவில்லை நீங்கள் துணிந்து வந்தீர்.
மலர்களைத் தளிர்களை மரங்களின் இலைகளை
உலர்வறத் தழுவினும் எமக்கு நீரே.
உங்களின் பரத்தைமை வெறுக்கவில்லை
உங்கள் தொடர்பினை நறுக்கவில்லை
தீண்டுங்கள் எனைவந்து மீண்டுமீண்டும்;
தென்றலுடன் கூடி உலவுவீரோ
என்றனை மறவாது நெருங்கிவந்தே
ஒன்றென இயைவதில் இன்புகண்டேன்.
எனைத் தொட்டுதொட்டு நீங்கி நின்ற இன்பக்கைகாள்.
வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்! நானும்
தூண்டவில்லை நீங்கள் துணிந்து வந்தீர்.
மலர்களைத் தளிர்களை மரங்களின் இலைகளை
உலர்வறத் தழுவினும் எமக்கு நீரே.
உங்களின் பரத்தைமை வெறுக்கவில்லை
உங்கள் தொடர்பினை நறுக்கவில்லை
தீண்டுங்கள் எனைவந்து மீண்டுமீண்டும்;
தென்றலுடன் கூடி உலவுவீரோ
என்றனை மறவாது நெருங்கிவந்தே
ஒன்றென இயைவதில் இன்புகண்டேன்.