சக்கிலியன் என்ற சொல்லை இப்பொழுது சற்று பார்ப்போம்..
இது ஆய்வு செய்து உடன் அறியக்கூடிய சொல் அன்று.
வண்ணான் என்பது ஒரு சாதிப் பெயராகவும் ஒரு தொழில்செய்வோனின் பெயராகவும் ஒருங்கு காணப்பெறுவது போன்று சக்கிலியன் என்பது அத்துணை தெளிவாக இல்லை. வண்ணான் எனில் துணிகட்கு வண்ணமூட்டுபவன் என்று எளிதில் அறியலாம். சக்கிலியன் என்பதை அங்ஙனம் உடன்கூற இயலவில்லை.
சக்கிலியன் என்பதை சக்கு இலியன் எனப் பிரிக்குங்கால் சக்கு என்பது இப்போது வழக்கில் இல்லை. ஆனால் அது யாழ்ப்பாணத்து அகரவரிசைகளில் சக்குஸ்நானம் என்ற சொல்லில் பொதிந்து காணப்படுகிறது: அதன் பொருள்:
n.
< சக்கு¹ + ஸ்நானம் Ceremonial washing of the eyes of a deity in a temple; விக்கிரகத்தின்
கண்களை நீராற் சுத்தி செய்யும்
பூசைவகை.
இலியன் என்றால் இல்லாதவன் என்பது பொருள். இலியன் அல்லது இலி என்பது வரும் பல சொற்கள் உள. அவற்றைக் காண்போம்:
ஒப்பிலியன் > உப்பிலியன் (உப்பிலியக் குடி )
இறையிலி
பிறப்பிலி
இறப்பிலி
கட்கிலி invisible, God. (கண் + கு + இலி )
என்பிலி எலும்பிலி ( புழு )
தப்பிலி
போக்கிலி > போக்கிரி திரிபு: ல > ர
நெய்ப்பிலி ( a flaw in precious stone, esp ruby)
பொருவிலி (= ஒப்பிலி )
அறுகிலி ( ஒரு பூண்டு )
எனப் பலவாம்.
சக்கிலியன் என்று அன் விகுதி பெற்றால் ஆண்பால்; சக்கிலிச்சி என்று பெண்பாலில் வரும்.
எனவே மேற்சொன்ன பூசை சக்கிலி என்னும் தோல்வினைஞர்கட்கு
விலக்கப்பட்டது என்று பொருள்படும். பின்பு முற்றிலும் விலக்கப்பட்டனர் போலும். இது மேலும் ஆய்தற் குரியது.
தொடரும்