வியாழன், 29 அக்டோபர், 2015

அந்தமாதியும் ஆதியந்தமும்

அந்தமாதி என்மனார் புலவர் என்கிறது சிவஞான போதம்.  நாம்  நாடோறும்   கேள்விப்படுவது  "ஆதி  அந்தம்"  என்பதுதானே!

அந்தம் ஆதி என்று தலைமாறி  வந்தது ஏன் ?  இதற்குக்  கடவுள் என்று  பொருள் கூறினர் அறிஞர் சிலர். இதை  யாம் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.htmll

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_27.htmll


தோன்றியதே  ஒடுங்கும்  (அழியும் ) என்று  நூலாசிரியர்  முன்வரிகளில்  கூறியுள்ளபடியால் அதை விரித்து விளக்கவே  " அந்தம் ஆதி " என்கிறார் என்பது எம்  கருத்து ஆகும்.  உலகம் அழிந்து  இவ்  அழிவிலிருந்தே மீண்டும் ஆதி ( ஆகுதல்,  உருவாக்குதல் ) ஏற்படும் என்பது பொருளாம்.

முட்டையும் கோழியும் போல  அந்தம் ஆதி மாறி மாறி  வருகிறது.

இதற்கு மறுப்பு உண்டாகலாம். கூறியதே எப்படி மீண்டும் கூறலாம் என்பதுதான் அது, உறுதிப்படுத்தி உரைத்தற்  பொருட்டு இது நிகழலாம் என்று கொள்ளுதல் கூடும். 

நீங்கள்  சிந்தித்து இதை ஏற்கவோ தள்ளவோ செய்துகொள்க.



  

திகதி தேதி திதி

திகைதல் என்னும் சொல்லை இக்காலங்களில் நினைவில் யாரும் வைத்திருக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக  ஆங்கிலச் சொல்லான fix என்பதே பயன்பாடு கண்டுள்ளது.  விலை இன்னும் பிக்ஸ் ஆகவில்லை என்பர்.  அல்லது இன்னும் நன்றாகப்  படித்தவர் என்போர் டிடர்மின் determine பண்ணமுடியாமல் இருக்கிறது என்பர்.

அவசரமான இவ்வுலகில் வேற்றுமொழி கற்று வேலைபார்க்கும் நிலையில் இதைக் குறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதை விட, தமிழார்வத்தைப் பரப்ப  இயன்றவரை பாடுபடுதல் நல்ல பயனை உண்டுபண்ணக்கூடும்.

வண்டியை வாங்க விலை இன்னும் திகையவில்லை என்று
சொல்வதுண்டு.

இன்று நாம் காலகண்டரை ( நாட்காட்டியை) நோக்கினால், நாளை என்ன தேதி என்று திகைந்துவிடுகிறது.  கணக்கிடப்பட்டுத் திகைந்து நிற்பதால்,   அது " திகைதி" ஆகிறது. நடுவில் ஐகாரம் பெற்ற சொற்கள் குறுகி அமையும் என்பதை அறிந்த தொல்காப்பியர்,  ஐகாரக் குறுக்கத்தை எடுத்தோதினார்.  எனவே. திகைதி என்பது  திகதி என்றும், பின்னும் திகதி தேதி என்றும்  திரிந்தன.  பகுதி என்பது பாதி என்று திரியவில்லையா. அதுபோலவே.  ஆனால் தி என்ற முதலெழுத்து தே என்றும் திரிந்துள்ளது.

திகதி என்ற சொல் முதல் நீளாமல்  நடுவில் உள்ள க எழுத்தை இழந்தும் அமையும். அப்போது அது திதி என்றும் வரும். திகைந்த அல்லது, குறித்த, முன்பே அறியப்பட்ட  நாள் என்று கூறலாம். It acquired other meanings and nuances along the way with the passage of time.

திதி  என்பதற்குக்   கூறத்தகும் பொருள் வரையறவுகளில் (definitions)   முன்னரே  உறுதிபெற்ற ஒரு நாள் என்பதுமொன்றாகும்.   A date which is determined by a previous event. 

சிவஞான போதம் முதல் பாட்டில் இச்சொல் உள்ளது. அங்கு என்ன பொருளில் வந்துள்ளது என்று காணுங்கள்.

Click here to  read the previous connected post:-
tp://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

புதன், 28 அக்டோபர், 2015

searching old posts: useful?

முன்னர் எழுது  முனைகருத் தெல்லாமும்
இன்னும் இறுகப்  பிடித்தேமாய்  === பின்போய்த்  
திரக்கிக்தொட் டாலும் புதுக்குலைஈன்   வாழை  
பிறக்குமோர் பெற்றிவரு மோ

பொருள் :

பிடித்தேமாய் =  பற்றிக்கொண்டபடியாய்.
திரக்கி =  தேடி 
தொட்டாலும்  =  தோண்டினாலும் 
"தொட்டனைத் தூறும் மணற்கேணி "    என்பது  நினைவுகூர்க 
குலை ஈன்  -  குலை தள்ளும் .    வாழை : வாழை மரம் 
பெற்றி  -  தன்மை ..