செவ்வாய், 20 அக்டோபர், 2015

Indonesian fires cannot be extinguished

மூச்சுக்கு நற்காற்று கிட்டுமோ இப்போதே
ஆச்சென்ற எண்ணமும் ஆமோவீண்  ----  சீச்சி
இருமல் சளியென்றே எல்லாம்தாக் கிற்றே
வருமோதான் தென்றல் இனி



Indonesia fires can't be put out, Malaysian minister warns


செய்தி இங்கே...................................

https://sg.news.yahoo.com/indonesia-fires-cant-put-malaysian-minister-warns-083942958.html


திங்கள், 19 அக்டோபர், 2015

தாகம்

கம்  என்பதை ஒரு பின்னொட்டாகக் கொண்டு  தாகம் என்ற சொல்லினை ஆய்வு செய்யலாம்.

எடுத்துக்கொண்ட சொல்: தாகம்.

தாகம் என்பதில்  தா மற்றும் கம்  உள்ளன

உடலுக்கு நீர் தேவைப்படும் அறிகுறியாகிய  தாகத்தின் தா என்பதில்  இதற்கேற்ற பொருளில்லை. தா:  நீர்விடாயைக் குறிக்கவில்லை.

ஏன் ?

தண்ணீர் தவிக்கிறது என்கிறோம். தவித்தல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கொண்ட சொல்லின் திரிபுதான் தாகம்;

தவி + அம் = தாவம்.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தாவம் >  தாபம்,  இது வகர பகரப் பரிமாற்றத் திரிபு.

என் தாபம் நீ அறியாயோ ? என்கிறது ஒரு பாடல்.

மனத் தாபம்  (  மனஸ்தாபம் ) என்பது வழக்கு

தாபம் >  தாகம்.  ப பின் க வாகத் திரிகிறது/

ஆகவே கம்  என்பது இச்சொல்லில் ஒரு பின்னொட்டு அன்று.

Read also:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html




கு என்னும் இடைச்சொல்.

தமிழ் மொழியில் வழங்கும் பல சொற்களில்   பகுதி அல்லது முதல்நிலைக்கும்  விகுதிக்கும் நடுவில்  ஓர் இடை நிலை தோன்றுகிறது.  அதுதான் கு என்னும் இடைச்சொல்.

தேய் :>  தே .

தே + கு +  அம்  =  தேகம்.

பானையைப்  போட்டுத் தே தே என்று தேச்சு வெள்ளையாக்கிவிட்டாள். என்ற நாட்டுப்புறப் பேச்சில் தேய் என்ற சொல் தன்  யகர ஒற்றை  இழந்துவிடுதலைக் காணலாம்.   தேய் என்பது தேயி எனப்படுதலும் உளது.

வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது மேகம்.  இந்தச் சொல்லின் ஆக்கத்தில்  விளைந்த மற்றங்களைக் கவனியுங்கள்:

மேல் >  மே.   லகர ஒற்று மறைகிறது.

அடுத்து  கு என்னும்  ஓர் இடை நிலை  தோன்றும்.  பின் விகுதி வரும்.

மே  ​ +  கு + அம் =   மேகம்.

கு என்ற இடை நிலையை   இடை நிலையாய்  எண்ணாமல்  கு+ அம்  இரண்டையும் இணைத்து  கம் என்பதை ஒரு பின்னொட்டு என்றும் சொல்லலாம்.  அல்லது இரு விகுதிகள் புணர்க்கப்பெற்றன என்றும் சொல்லலாம்.   எல்லாம் ஒன்றுதான்.