தமிழ் மொழியில் வழங்கும் பல சொற்களில் பகுதி அல்லது முதல்நிலைக்கும் விகுதிக்கும் நடுவில் ஓர் இடை நிலை தோன்றுகிறது. அதுதான் கு என்னும் இடைச்சொல்.
தேய் :> தே .
தே + கு + அம் = தேகம்.
பானையைப் போட்டுத் தே தே என்று தேச்சு வெள்ளையாக்கிவிட்டாள். என்ற நாட்டுப்புறப் பேச்சில் தேய் என்ற சொல் தன் யகர ஒற்றை இழந்துவிடுதலைக் காணலாம். தேய் என்பது தேயி எனப்படுதலும் உளது.
வானத்தில் மேலே ஊர்ந்து செல்வது மேகம். இந்தச் சொல்லின் ஆக்கத்தில் விளைந்த மற்றங்களைக் கவனியுங்கள்:
மேல் > மே. லகர ஒற்று மறைகிறது.
அடுத்து கு என்னும் ஓர் இடை நிலை தோன்றும். பின் விகுதி வரும்.
மே + கு + அம் = மேகம்.
கு என்ற இடை நிலையை இடை நிலையாய் எண்ணாமல் கு+ அம் இரண்டையும் இணைத்து கம் என்பதை ஒரு பின்னொட்டு என்றும் சொல்லலாம். அல்லது இரு விகுதிகள் புணர்க்கப்பெற்றன என்றும் சொல்லலாம். எல்லாம் ஒன்றுதான்.