வியாழன், 10 செப்டம்பர், 2015

மகாதீர்மேல் காவல்துறை விசாரணை:


முன்னாள்   தலைமை அமைச்சர் மகாதீர்மேல்  காவல்துறை விசாரணை:


Ex-PM Mahathir to be questioned 'soon' over Bersih 4 comments: Malaysia police chief

http://www.channelnewsasia.com/news/asiapacific/ex-pm-mahathir-to-be/2097382.html?cx_tag=similar#cxrecs_s

what is paavam?

தமிழுக்கே சிறப்பாக உரியது  ழகரம் ஆகும்.  தமிழின் உடன்பிறப்பாகிய மலையாளத்திலும்  அது  தனித்தன்மை பெற்று இலங்குகிறது.  ஒரு தமிழன்  "மளெ "  வந்துவிட்டது என்பதைக் கேட்ட மலையாள நண்பன் "  என்ன மளை,, மழை என்று சொல்" என்று திருத்துமளவிற்கு அது மலையாளத்தில் "தனித்தன்மை" பெற்று இலங்குகிறது.

தமிழ்ப் பேச்சு மொழியில்  (colloquial )  வாழ்க்கைப் பட்டாள் என்பதை வாக்கப்பட்டாள்     என்றுதான் திரிக்கின்றனர். 
இதுபோலவே 

கீழ்க்கடை  >  கீக்கடை;
தாழ்க்கோல் >   தாக்கோல் 

என்பவும் (=என்பனவும்)   அத்தன்மை உடையனவாம்.

வாத்தியம் என்பது  வாழ்த்தியமே.  ழகர  ஒற்று மறைந்து வாத்தியம் ஆயிற்று. 
இதில் கிருதம் ஒன்றும் இல்லை.  மங்கல நாளில் வாழ்த்தி( இசை)  இசைக்கப்பட்டதால்  வாழ்த்தியம் எனும் சொல் அமைந்தது. 

வாழ்த்தியம் என்பதில் உள்ள இறுதி  "இயம்"  
இயம்>  இயங்கு;  இயம் > இயக்கு.:   வாழ்த்தியக் கருவிகள் இயக்கப்படுவன .
வாழ்த்தியம் என்பது எத்துணை அழகமைந்த சொல் !  இதை  அறிஞர்  ஆய்ந்து உரைத்துள்ளனர் . 

அறியாத் தமிழன் அயலெனில்  அது தமிழென்று புகட்டுவோம்.   

பாவம் என்ற சொல்லும் அப்படியே.   பாழ் + வு+  அம் = பாழ்வம்  > பாவம் .  இங்கு வு ,அம்  என்பன விகுதிகள். 

Do you know that when you do something bad or evil today, it takes away or nullifies the good deed you performed yesterday?  So  yesterday's good became பாழ் .  That then is the பாழ்வம் or  பாவம்  in it.   It tarnishes you  just as a black spot in a white fabric.   "The good .doth is interred with your bones!"  (to follow Shakespearean language to some extent.)

பாவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் இதுவே. 











ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நோட்டு and note

2008க்கு முன்பிருந்தே சொல் திரிபுகளை பல நோட்டுப் புத்தகங்களில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  ஆனால் இப்போது அங்கு நான் குறித்துவைத்துள்ளவற்றை எடுத்துப் பார்ப்பதில்லை. மேலட்டைகளை மட்டும் துடைத்து மீண்டும் அடுக்கி வைப்பதுண்டு.  அதுவும் வேறெதையும் தேடும்போது அதையும் செய்வேன்.   அதற்காக மெனக்கெட்டுச் செய்வதில்லை.

மேலே "நோட்டுப் புத்தகம்" என்ற தொடர் வருகிறது.  இங்கு "நோட்டு"  என்பது  ஆங்கிலம் அன்றோ?   என்று வினவுங்கள். அதைப் பற்றிப்  பேசுவோம்.

"நோடுதல் "என்பது  ஆய்தல் என்ற பொருள் உடைய சொல்.இந்தச் சொல் அப்பொருள்  உடையது என்பதை எளிதில் அறியலாம். எப்படி ?

நோடு >  நோட்டம் . (நோடு +  அம்  )

ஆடு > ஆட்டம் என்பதில்போல டகரம்  இரட்டித்தது.  அதாவது:  டு +அ  = ட்ட .

நோடு  >  நோட்டு >  நோட்டம்.

பாடு > பாட்டு  ( அதுபோல  நோடு >  நோட்டு )

நோடு என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு  நோடு+ புத்தகம் என்று புணர்த்தி  நோட்டுப் புத்தகம் என்று புணர்ச்சித் திரிபாகவும் காட்டலாம்.

நோட்டுப் புத்தகம் :   என் சொல் நோட்டங்களைக் கொண்ட காகிதக் கட்டு  அல்லது சுவடி. 

note book என்பது ஆங்கிலம் அன்றோ என்று நீங்கள்  எழுப்பும்  நாவோசை  என் செவிகளுக்கு எட்டுகிறது .( எண்டே  செவியிலு  எத்துன்னு  :  மலையாளம் )
ஆமாம்,  ஆங்கிலமும்தான் ,

நோட்டுப் புத்தகம் என்கையில் அது ஆங்கிலமாகவோ  தமிழாகவோ இருக்கலாம்.

எழுதியவர் , எழுதுபொருள்,   கட்டுரை எழுந்த சுற்றுச்சார்பு ,  எழுதினவர்  எண்ண ஓட்டம் முதலிய பல கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

note  என்பது nota  என்ற  இலத்தினிலிருந்து வருகிறது.   இதிலிருந்து உங்கள் 
ஆய்வு தொடங்கலாமே .,