பேராசிரியர் வை. அவர்கள் சட்டம்பயின்று வழக்குரைஞர் ஆனவர். தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராய் அமர்ந்த பின் அவருக்குச் சொல் ஆய்வில் மிகுந்த விருப்பம் உண்டாயிற்று. பேரகராதியில் எது எந்தமொழிச் சொல் என்று குறிக்க வேண்டி யிருந்தமையால் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நிலையில் அவர் இருந்தார். இவர்க்குமுன் நூல் எழுதியவர்கள் சொன்னதைக் கண்டஞான்று அதை மேற்கொள்வது ஒரு வழி.
அஃது இல்லாதபோது, ஒரு சொல் தமிழா அன்றா என்றறிய, வேறு மொழி அகராதிகளில் அச்சொல் இருக்கிறதா என்று அறியவேண்டும்.. அப்படித் தேடுங்கால், கண்டால் அது அந்தமொழிக்கு உரியது என்று எடுத்துக்கொண்டுவிடலாம். இந்த உய்த்தியை இவர் கையாண்டதாகவே தெரிகிறது.
இந்த உ(ய்)த்தியை நாமும் மேற்கொண்டு கீழ்க்காணும் சொல்லை மூலம் அறிந்துகொள்வோம்.
சொல்: கட்டுமரம்.
ஆங்கிலத்தில் கட்டமரான்.
ஆங்கில அகராதியில் இருக்கிறது. அங்கு மூலம் குறிக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம்.
முடிவு: கட்டுமரம் ஆங்கிலச்சொல்.
கட்டமரான் என்பதே கட்டுமரம் என்று தமிழில் வருகிறது.
மிக்க மகிழ்ச்சி தரும் முடிவு.
சரியா?