புதன், 10 ஜூன், 2015

வேகுமே உள்ளம்

இப்போது  நம் ஔவைப் பாட்டியின் ஓர் அழகிய சங்கப் பாடலைப் பாடி இன்புறுவோம்.  இது குறுந்தொகையில் 102வது பாடல் ஆகும்.

உள்ளின் உள்ளம் வேமே;   உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்று ;  வருத்தி 
 வான் தோய்வு அற்றே காமம்;  
 சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. 

உள்ளின் உள்ளம் வேமே  -   காதலரை நினைத்தாலோ உள்ளம்  மிகத் துன்புறுகின்றது ;    வேமே என்பது வேகுமே என்பதாம்   இதிற் குகரம் தொகுந்து நின்றது .
 உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று -  காதலரை நினைக்காமல் இருப்பது எமது  ஆற்றலுக்கு உட்பட்டது  அன்று  
வருத்தி  வான் தோய்வு அற்றே காமம்  -   இக்காதல் தந்த வருத்தமோ வானத்து மேல் சென்று முட்டியது போல்  நிற்கின்றது ;
யாம்  சொல்லத் தக்கது என்ன ?
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. -  எம்மை  மருவிப் பிரிந்தவர் நல்லவர் அல்லர் என்பது தவிர.
சங்க காலத்தில் காதல் மணங்களே .நிகழ்ந்தன  காதலித்த  பெண்களைக்  கைப்பிடிக்காமல் தொலைந்துவிட்ட ஆடவர்களால் நேர்ந்த  சீர்கேட்டைத் தவிர்த்தல் பொருட்டே  பெற்றோர் பார்த்துவைக்கும் மணவினைகள் நடப்புக்கு வந்தனவா என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிட்டுப் பாடலை நுகர்வோம்.

edit later  



ஞாயிறு, 7 ஜூன், 2015

Malaysian Earthquake, reasons and beliefs,,,,,,

மலைவாழ்  ஆவிகளை
மதிக்காமல் படமெடுத்துக் 
கொலைசூழ் ஆத்திரத்தைக்
குத்திவிட்ட காரணமோ
நிலையாழ் பெரும்பாறை
நிலம்தளர்ந்து புரண்டிழிந்து
தலைகீழ்த் தடுமாற்றம்
தந்துயிர்கள் குடித்திடவே

இங்கு  மலை வாழ் ஆவிகள் என்றது கோத்த கினபாலு என்ற மலேசிய சபா  மாநில மலைப் பகுதிகளில் வாழ்வனவாக அவ்விடத்துப் பழங்குடியினரால் நம்பப்படும் ஆவிகளை,

ஐரோப்பியர் சிலர் அம்மணப் படங்களை அங்கு எடுத்து ஆவிகட்கு ஆத்திரம் ஊட்டியதாக ஒரு குறை எழுந்தது. அதனால்தான் நிலநடுக்கம் நேர்ந்ததாம்.  

காரணமோ என்றது இதுதான்   காரணமோ என்று வினவிய வாறு.

நிலையாழ் என்பது நிலை ஆழ் என்று பிரியும்,  இது ஆழ் நிலை என்று பொருள்படுவது.

ஆழத்தில் நிலை கொண்டிருந்த பாறைகளுக்கு இது அடையாக வருகிறது. உட்பதிந்திருந்த பாறைகள் நில நடுக்கத்தில் பெயர்ந்து வீழ்தல்  வரணிக்கப் படுகிறது.

இழிந்து என்பது இறங்கி  என்று பொருள் தரும்.

மற்ற  வரிகள் எளியவை


16 dead after Malaysia quake loosed 'rocks as big as cars'

https://sg.news.yahoo.com/singapore-says-5-students-1-teacher-killed-malaysia-060326050.html

https://sg.news.yahoo.com/democracy-great-game-musical-chairs-says-dr-m-160600748.html


வெள்ளி, 5 ஜூன், 2015

Malaysian PM and his critics' challenge

தோன்றின் புகழொடு தோன்றுக
வள்ளுவப் பேரறிவாளன்
வல்லோனாய்த்   தங்க  விழைந்தானுக்கு
 வழங்கிய அறிவுரை இதுவாகும்

தோன்றித் தொந்தரவுகளே வருமென்றால்
தோன்றுவதுதான் எதற்கு?
என்ன பயன் நாட்டுக்கு தனக்கு? பிறர்க்கு?
தோன்றாமையே யாண்டும் நன்று.

கணக்குகள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை
பிணக்குகள் ஆகையால் வருமே
மணக்கும் மல்லிகைக்  காடாகாதே
 மாந்தர் சேரும் இடமது:
நினைக்கும் இன்னல்களும்
நினைக்கவே  மாட்டாத இன்னல்களும்
ஊறும் இடமாகும் அது
மாறாது துன்பம்


https://sg.news.yahoo.com/malaysian-pm-slammed-failing-face-critics-scandal-074532124.html