ஒரு துணியையோ அல்லது வேறுபொருளையோ கடித்து, வேறு உருவோ அளவோ கொள்ளும்படி செய்வதற்குக் கத்திரிக்கோல் உதவுகிறது, இரு வெட்டுக் கோல்கள் ஒரு தலை இணைப்பைப் பெற்று கைவிரல்களுக்குள் மாட்டுதல் பெற்று வெட்டும் பொருளைக் கடித்தல் போல் வெட்டுவது கத்திரிக்கோல் ஆகும், ஆங்கிலத்தில் "a pair of scissors" - வெட்டு இணைகோல்கள் எனப்படும் இது தமிழில் கத்திரிக்கோல் என்று ஒருமையில் சொல்லப்படுவது ஆகும்.
கடித்து உருவை அல்லது அளவைத் திரிப்பதால் அதாவது மாற்றுவதால் அது கடித்திரி ஆயிற்று பின் அது நடுவில் உள்ள "டி"யை இழந்து கத்திரி ஆனது
கடித்தல் என்பது வெட்டுதல் குறிக்கும் என்றார் அறிஞர் கால்டுவெல்.. இது கத்திரி எனப்பட்டது ஓர் இடைக்குறை , கத்திரி - கத்தரி . --- கத்தரிக்கோல்
சப்பாத்து கடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக
கடித்து அரி என்பது கடித்தரி > கத்தரி என்றாயதெனினும் ஏற்புடைத்தே.
இந்த "அரி " என்னும் சொல் அரிவாள் என்ற பதத்தில் உள்ள "அரி " என்பதுதான் . கடிப்பதும் வெட்டுவதுதான். பின் அரிதல் என்பதும் வெட்டுவதுதான்; இஃது கூறியது கூறலாகாதோ எனின் , ஆகாது; வெட்டுவது ஒன்றிரண்டாய் வெட்டுதல் என்றும் அரிதல் எனற்பாலது மிகச் சிறியனவாய் நுணுக்கித் துணித்தல் என்றும் வேறுபடுத்திக் கொளலாகும். இதிற் பொருளமைதி காணார் கடித்திரி > கத்திரி > கத்தரி எனக் கோடல் நன்று.
மொழி பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்ற தொல்லாசிரியர் தொல்காப்பியனார் அறிவுரை காணின், இங்ஙனம் இருவேறு வகையிலும் கூறியுள்ளதனை வரவேற்பர் என்பதெம் துணிபு.
----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
கடித்திரி >> கத்தரி என்பதனை மாதிரி என்பதனோடு ஒப்பு நோக்குக. மா: அளவு. திரி= திரித்தல், அமைத்தல். இன்னொன்றன் அளவுக்கு அமைத்தல் " மாதிரி:." இது பிறரும் கூறினர் . We are here adverting to the common ending in these words: "thiri".