கோவிலுக்குள் சமைக்கும் இடம் பெரும்பாலும் மடைப்பள்ளி என்று குறிக்கப்பெறுகிறது. கல்லூரிகள், "பலகலைகள்", பள்ளிக்கூடங்கள் , தொழிற் கூடங்கள் முதலிய இடங்களில் உள்ள உணவு பெறும் இடங்களுக்குப் பெயர்கள் அமைந்திருக்கக் கூடும்; இவற்றை அகரமுதலிகளில் காணமுடிவதில்லை . காரண, இத்தகைய அமைப்புகள், நமக்கு இன்னும் ஒரு வகையில் புதியவைதாம். பண்டு குருவானவர் வீட்டிலேயே சாப்பாடு
கிட்டியிருக்கும் .
வெளியில் சென்று சாப்பிடுவதற்கு முடியாத போது, படிக்கும் இடத்திலேயே உண்பதற்கு ஓர் இடம் இருக்கும். உள் தின்னும் இடம் .
தின் என்பதை முதனிலை நீண்ட தொழிற்பெயராய் ஆக்கினால், "தீன் " என்றாகும். தீன் என்பது முன்பே இகர விகுதி பெற்று தீனி என்று ஒரு சொல் இருக்கிறது. அதைக் கவனிக்க வேண்டாம். தீன் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
உள்+ தீன் -= உண்டீன் ஆகும். உள்+ து என்பது " உண்டு" ஆனதுபோல்.
கண்டீன் என்பதற்கு நேர் சொல்லாக உண்டீன் என்பதைத் தூக்கிப் போடலாம்.
இது ஒரு சொற்புனைவு விளையாட்டுதான்.
உள்ளேயே தின்னும் இடம், Just coined when I was resting. Not serious. Idea is to sound close to canteen and yet be different.
You try yours.