ஆசிரமம் என்ற சொல் தமிழிலும் இருக்கிறது. சங்கதத்திலும் இருக்கிறது. ஏனை இந்திய மொழிகளிலும் அது வழங்கும். இந்தச் சொல்லின் ஒலியமைப்பு நோக்கினால், அது இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்குரியதாகத் தெரியவில்லை.
இல்லறவாழ்வினை விடுத்தோர், தாம் தங்கிய இடத்தைக் குறிப்பதே ஆசிரமம் ஆகும். இதற்கு வேறு தொடர்புபட்ட பொருள்களும் உள.
துறவிகள், தாம் இருக்குமிடத்துடன் பற்றுக்கோடு கொண்டிருப்பர்.
ஆசு என்பது பற்றுக்கோடு ஆகும்.
ஆசு + இரு + அம் + அம் = ஆசிரமம்.
ஆசு= முன்கூறியபடி.
இரு = தங்குதல்.
அம் : விகுதி. அம்: இரண்டாம் விகுதி.
இது தமிழ் முறையைப் பின்பற்றிய விகுதி சேர்ப்பு முறை.
தமிழ் முதலிய மொழிகளில் ஒன்றுக்கு மேஎற்பட்ட விகுதிகள் வரும். இங்கு ஆய்வு செய்யப்பட்ட ஏனைச் சொற்களைக் காண்க.
இங்ஙனம் விகுதிகள் பெற்ற சொற்கள் பல.
சங்கதத்துக்கு இரு அம் விகுதி வேண்டாம்."ஆஸ்ரம" என்பது போதும்.
ஆசு+இரு+அம்+அ = ஆசிரம>ஆஸ்ரம இறுதி "ம்" விடுகை காண்க.