திங்கள், 2 பிப்ரவரி, 2015

No His Excellency for me....

மாண்பு மிகு என்று பொருள்படும்  His Excellency ..... என்ற உயர்மதிப்புத் தொடரைத் தம் பெயருக்குமுன் பயன்படுத்தலாகாது என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தம் மனைவிக்கும் எந்தப் பட்டப்பெயரும் கொண்டு முன்பொருத்தலாகாது என்றும் பணித்துள்ளார்.


பெருமைக்கண்  பணிதல் 
மேலும்   பெருமை  சேர்த்தது.

an unusual creature in Borneo

அடர்காட்டின்  எல்கரடி அங்கிருந்து வெளியேறித் தோப்புக்குள் ஒளிந்தே
முடிகொட்டித் தோல்தெரியத்  தளர்வுற்ற நடைபோட்ட நிலைகண்ட இருவர் 
தடிகொண்டு தாக்கியதில் நினைவற்று வீழ்ந்தபினே பிடிபட்டுக் கிடக்கத் ,
துடிவந்து நகர்ந்ததினால் கொடுபோனார் கானகத்துள் மறுவாழ்வு பெறவே.


எல்கரடி -  sunbear ( a type living in Borneo)
துடி : வலிமை , பலம், துடிப்பு.  கொடு = கொண்டு.
பினே =  பின்னே 


https://sg.news.yahoo.com/blogs/what-is-buzzing/unusual-creature-in-sarawak-oil-palm-plantation-scares-workers-074116782.html


Unusual creature in Sarawak oil palm plantation scares workers

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

Modi: Let my luck benefit people

மோடிப் பெருமக‌னார் முன்னுரைத்தார் தேர்தலுக்குக்
கூடி இருந்தநன் மக்களிடை=== நாடுங்கள்
ஆகூழ் அமைந்தவன் நானென்றால் நாட்டினுக்கே
ஆகட்டும் ஆகூழ் அது.

ஆகூழ் =  அதிருட்டம்;
முன்னுரைத்தார்:  delivered a key address, or lead speech.

Read more:
http://www.ndtv.com/video/player/news/if-my-luck-can-benefit-the-country-why-elect-someone-unlucky-says-pm-modi/355057

கல்லெண்ணெய் (petrol) விலை இந்தியாவில் குறைந்துவிட்டது,  இதன் பயன் மக்களையும் சுற்றுப் பயணம் செல்வோரையும் சென்றடையுமோ? பொறுத்திருந்துதான்  பார்க்கவேண்டும். மோடி அதிருஷ்டசாலி என்கின்றன 
எதிர்கட்சிகள். அதற்குமோடி கூறிய பதிலே மேற்கண்ட பாடல். இந்தப்பதில் ஒரு திறமையான  வாதத்தை உள்பொதிந்துள்ளது என்று நான் நினைக்கின்றேன்.