சனி, 24 ஜனவரி, 2015

பாராளும் மன்னனாய் பக்சே


பையவே  பார்த்தலும் பாராளும் மன்னனாய் 
வாழ்ந்துள்ளான் இராச   பக்சே
கொய்யவே கைவந்த கோலத்துக் கனிகள்போல்
காய்த்திட்ட பணத்தை உண்டான்
நையவோ பிறந்தார்கள் நாட்டினரும் நாசவியற்  
குண்டுதுளைக் காத நேர்த்தி
ஐயகோ ஐம்பதிற் கதிகமாம் உந்துகளும் 
அணியாகப் பயன்செய் தானே

பணம்  என்பது அரசுத் தோட்டத்தில் காய்க்கிறது;  அது ராஜ பக்சேவுக்கு காய்கள்  தாம் . காய்கள் என்பவாதலின்  அவன் உண்ணற்குரியனவல்ல.
கொய்யக் கைக்குள் வந்த அழகிய கனிகளாய் அவன்  எண்ணி அவற்றை  உண்டுவிட்டான்  என்பது  கருத்து.



வெள்ளி, 23 ஜனவரி, 2015

Investigation

Temple consecration this Monday 26 inst

திங்களன்று திருக்குடமே நீராட்டப் பெறுகின்ற நன்னாள்  காணும்
தங்கக்க லசமுடைய தன்னிகரே இல்லாத வினாய கன்றன்
துங்கமுறு ஆலயத்திற் சென்றுதொழு திணையில்லா மனக்க  ளிப்பில்
பங்கமறு சீர்வாழ்க்கை பாரினிலே பெறுவீரே பாக்கி யம்மே


முன்னாளில் இவண்வந்த இந்துக்கள் மூதறிவால்  நிறுவிச் சென்றார்
 இந் நாளும் இன்னாளாய் இருந்திடவே  இவ்விடமே கோவில் கண்டார்
எ ந் நாவில் மொழிவாரும்  என் நாதன் என வணங்கித் துன்பம் நீங்கிக்
கண்ணாரக் கண்டுவழி காண்புறுத்தும் வினாயகனைக் கருத்தில் வையே

எ ந்  நாவில் -  எந்த பாடையில் ;


விழுமியநல்  நாயகனே  விநாயகனாம் என்றுணர்வார் பல்லோர் உண்டே
விழும்எழும்பல் வேதனைசேர்  வினைஆய்வான் அவனென்பார் பல்லோர் உண்டே
அழும்குரல் கேட் டாதரவு நல்கிடுவான் வினாயகனே கண்டோர் உண்டே
உழும் நிலத்துப் பயிராகும் உள்ளன்பால் வினாயகனைக் கருத்தில் வையே. 


place: SeNpaga VinAyakar Alayam,   Ceylon Rd  Singapore

will edit