து என்னும் பெயர்ச் சொல்லாக்க விகுதிபற்றி முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.
அங்கு விளக்கப்பட்ட விகுதி சேர்ப்பு முறையையும் ஆக்கப்பட்ட சொற்களையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் அதன் தொடர்பிலேயே சொற்கள் சில காண்போம்.
வித் > விதை.
வித் > வித்து.
இவற்றுக்கு அடிச்சொல் ஒன்றுதான். விதை என்பது ஐ விகுதி பெற்று வினைச்சொல் ஆயிற்று. வித்து என்பது து விகுதி பெற்று பெயராகி விட்டது.
இங்கு பாருங்கள்;
கத் > கத்து. து பெற்று வினையாம்.
கத் > கதை. வினையும் பெயரும் ஆகும் கதை > கதைத்தல். கதை என்பது முதனிலைத் தொழிற்பெயராகலாம்.
து என்பது வினைக்கும் பெயருக்கும விகுதியாகும்,
வித் என்பது ஆய்வில் வெளிப்போந்த செயற்கை அடிச்சொல் தமிழ் பேசப்படும் மொழி ஆதலின் சொற்கள் வித், கத் புத் என்ற வடிவில் அமையா.
விளக்க்குதற்பொருட்டு பாணினி முறையில் அமைந்தவை இவையாகும்.
தமிழில் இயற்கை அடிச்சொல் விது கது குது எ ன்றமையும். தமிழ் முறையில் கது என்பது இரட்டித்துக் கத்து என்றாகும்/ பிறவும் அப்படியே. அப்போது இறுதி து என்பது விகுதி என்று தமிழ் இலக்கணியர் கொள்ளார். இது தமிழுக்கும் ஏனை மொழிகட்கும் காணக்கிடக்கும் வேறுபாடு ஆகும். ஆய்வில் தெளிவின்பொருட்டு இங்கு வித் கத் என்பன காட்டப்பெறும். இதனை முன்பும் விளக்கின நினைவு உள்ளது.