செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பண்ணுறுநல் பாப்புவாவைப் பார்த்தல் இன்பம்


எண்ணூறு மொழிபேசும் இனிய மக்கள்,
இறந்துவிட்டால் ஏதுமிங்கு உரைத்தல் ஆகா(து)
உண்ணுவதும் உறங்குவதும் எளிய வாழ்வும்
உயர்வான புன்னகையில்  தெரிய லாகும்.
கண்ணினையே கவருமெழில் நாட்டின் நட்பைக்
காட்டிநிற்பர் கவலையின்றி நியுகி  னீயில்
பண்ணுறுநல் பாப்புவாவைப் பார்த்தல் இன்பம்
பயன்பெற்று மகிழ்வோங்கும் சென்று காண்பீர்.


http://www.dailymail.co.uk/news/article-2658357/Humans-Papua-New-Guinea-The-incredible-pictures-capture-troubled-island-nations-vibrant-spirit-amid-hardship-poverty.html

http://www.dailymail.co.uk/news/article-2658357/Humans-Papua-New-Guinea-The-incredible-pictures-capture-troubled-island-nations-vibrant-spirit-amid-hardship-poverty.html

Some people have had undesirable experiences there. But this can happen in any country.  

தூண்டாத விளக்கென்றால்.........

வேண்டாத எலிபற்றி எழுதி வைத்து
விடுமுறைக்குச் சென்றுவிட்டு இங்கு வந்தேன்!
தூண்டாத விளக்கென்றால் அதுநான் என்றால்
தோன்றுவது தற்புகழ்ச்சி ஈன்றாள் வைவாள்!
ஈண்டுவரும் இணையத்துத் தோழர்  என்றும் 
இதற்காகக் கோபிக்க மாட்டார்  என்னை!
தாண்டியொரு நாள்சென்றால் தக்க தான‌
தமிழ்விளக்கம் தந்திடுவேன் வந்து காண்பீர்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Naughty mouse, I caught you!

குறும்பு எலி

கூரையின் கீழடைப்பில்
குடுகுடு என்றே  ஓடினாய்.
யாருமுனை வெறுத்தொதுக்க‌
கீச்சுக் கீச்சென்று கத்தினாய்!
குளிரூட்டியின் வெளிக்குழாயைக்
குறுகுறு என்று கத்திக்கொண்டு
நள்ளிரவும் பார்க்காமல்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍----
சுள்ளியென்று நினைத்தாயோ
கடித்துக் குதறிவிட்டாய்.

பொறிவைத்தேன் மாட்டிக்கொண்டாய்.
பரிவுபெறும் பார்வை ஏனோ?
அதிகாலை உனைக்கொண்டுபோய்
ஆற்றங்கரையில் எறிந்திடுவேன்.
கொல்லமாட்டேன், அஞ்சாதே.
வினாயக ச‌துர்த்தி இன்று.
வினை ஆயவை விலக்கிடுவேன்.
வினை ஆயகத் தலைவன் அவன்.
எனையும் அவன் ஆயவிடேன் 
வினா எழ இடங்கொடாமல்
உனைத் தொலைவில் சேர்த்திடுவேன்.