கோடி கொடுத்துக் கொடுந்தேர்த லில்வென்று
நாடு நடத்துமோர் நாயகனின்--- கேடறிய
ஏடு வெளியிட்டும் ஏதும் தொடர்காணோம்
மூடினவோ ஊடகங்கள் வாய்.
வேறொரு நாட்டின் தலைவர் பற்றி ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால், அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்நிலை பற்றிய பாடல் இது.
ஏடு = பத்திரிகை, வெளியிட்டும் = செய்தி வெளியிட்டும்.
பணம் "புரண்ட " தேர்தலாதலால் "கொடுந்தேர்தல் " ஆயிற்று.
சில சமயங்களில் செய்திக்குப் பிந்திய நிகழ்வுகளை ஊடகங்கள் கவனிப்பதில்லை. பின் நிகழ்வுகள் செய்தித் தகுதியை (newsworthiness )இழந்துவிடுகின்றன போலும்.