தண் பாலாய் வானில் தகதகக்கும் தட்டனைய
மண்கோளும் ஆகுமே மந்த நிலா ---பண்பாடும்
வண்கவிகள் வாய்ப்பட்டு நின்றோம் வரைபாவின்
நுண்ணெறிகள் நூற்றின் மிகும்
தண்பாலாய் = பால் நிறத்தில் ' தட்டனைய - ஒரு தட்டுப்போல் தோன்றும்;
மண்கோள் - மண்ணாலான உருண்டை; மந்த - குறைந்த ( ஒளி ')
பண்பாடும் = பாடல்கள் இயற்றும்; வண்கவிகள் = சிறந்தகவிகள்;
வாய்ப்பட்டு - இடத்தில் அகப்பட்டு; நுண்ணெறிகள் - நுட்பமான வழிகள்;
நூற்றின் = நுற்றின் பலவாய்.
கவிகள் நிலவினைப் புகழ்ந்து பாடுகிறவர்கள் . நாம் அவர்களின் வாய்ப்பட்டு நிற்கின்றோம் வாய் = இடம் . அதாவது அவர்களின் கற்பனை வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் அவர்களின் பாக்களில் பற்பல சொற்பயன்பாட்டுத் தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றார்கள் ஆகவே வரைபாவின் நுண்ணெறிகள் நூற்றின் மிகும் எனப்பட்டது