Now, on a recent funny criminal case in TN.
ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
ஒருபோதும் ஏலா உலகமீதில்
பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!
மடுத்தசெவி எல்லாம் விழுந்து -- அதை
மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
விலங்கேற்றார் எவ்வாறு அறிகிலேனே.
மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
நிலைகொண்ட தெவ்வாறு அறிகிலேனே!
#அணல் -தொண்டை, வாய். அதை : இங்கு " அணல் " என்ற சொல்லைப் பயன்படுத்தி வேறிடத்தில் எழுதியுள்ளேன்
ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.
மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )
வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.