அரசர்கள் போரிட்ட காலம் போச்சே!
அயல்நாட்டுப் படைபற்றி அச்சம் இல்லை,
தெருக்கோடிச் சாலைகளில் கிடக்கும் பெட்டி
தேர்போல நிலைநின்ற பேருந்(து) ஆரும்
வெறுக்காத விட்டுப்போம் பொருள்கள் தம்மில்
வீணர்கள் வைத்தாரோ வெடியென் றஞ்சி
இருக்காமல் இடம்விட்டே ஓடும் இத்தீ
விரவாதப் போரன்றி வேறொன் றில்லை.
அயல்நாட்டுப் படைபற்றி அச்சம் இல்லை,
தெருக்கோடிச் சாலைகளில் கிடக்கும் பெட்டி
தேர்போல நிலைநின்ற பேருந்(து) ஆரும்
வெறுக்காத விட்டுப்போம் பொருள்கள் தம்மில்
வீணர்கள் வைத்தாரோ வெடியென் றஞ்சி
இருக்காமல் இடம்விட்டே ஓடும் இத்தீ
விரவாதப் போரன்றி வேறொன் றில்லை.