அர்த்த சாத்திரம் ( சாஸ்திரம்) என்பதைத் தமிழில் ''பொருள்புரி நூல்'' என்பர். பொருள்நூல் என்பதைப் பொருணூல் என்றும் புணர்த்தி எழுதலாம். (ள்+நூ-- ணூ என்று வரும்.) இந்தப் பெயரில் சாணக்கிய(ன்) என்போர் சமஸ்கிருதத்தில் அர்த்தசாத்திரம் என்ற நூலை இயற்றினார் என்பது அறிந்ததே.
அறுத்த என்ற வினையெச்சத்தைத்தான் அர்த்த என்று சமஸ்கிருதத்தில் சொல்வர். பாதி என்பது பகுதி என்பதன் திரிபு என்றாலும் இதன் அமைப்புப்பொருள் பகுக்கப்பட்டது என்பதுதான். வழக்கில் சரிபாதியைக் குறிக்கின்றது. அறுத்த என்பதும் பகுக்கப்பட்டது என்பதே ; ஆனால் தமிழில்போல் வடமொழியில் பாதியைக் குறிக்கிறது. இருமொழிகட்கு மிடையில் உள்ள பொருளமைப்பு ஒற்றுமையை இது காட்டுகிறது.
பொரு என்பது சொல்லின் ஒரு முதன்மைப் பகுதி ஆகும். பொருள் அறியவியலாத வாயொலி ஒரு வெற்றொலிதான். இதைச் சொல் என்று பெரும்பாலும் குறிப்பதில்லை. பெரும்பாலான மொழிகள் ஒலிவடிவம் வரிவடிவம் என இரண்டு வடிவங்களும் உடையவை. ஒலிவடிவம் மட்டும் உள்ள மொழிகளும் ஆய்வறிஞர்களால் அறியப்பட்டுள்ளன.
பொரு ( பொர்) என்பது ஓர் அடிச்சொல். இது உள் விகுதி பெற்று பொருள் என்று ஆகிறது. பொர் - பொரு என்ற அடியிலிருந்து வரும் இன்னொரு சொல் பொருந்து என்பது. இச்சொல்லிலிருந்து பொருள் என்பதன் அறிகிடப்பினைத் தெரிந்துகொள்கிறோம். சொல்லுடன் பொருந்தி நிற்பதே பொருள் என்று அறியப்படுகின்றது. சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பொருந்தி நிற்பதான பொருள் நமக்கு அறிவிக்கின்றது.
செதிள்போலப் பிரியும் மேற்படிவைப் பொருக்கு என்கின்றோம். இதுவும் பொருந்தியிருந்தது என்பதைக் குறிக்கும் சொல்.
இவ்வாறே நீங்களே தொடர்புடைய சொற்களை அறிந்துகொள்ளலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.
_-----_-----------------------------
ethereal. எத்தி ரியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக