இன்று கச்சா என்ற சொல்லை ஆய்ந்தறிவோம்.
சில அரைத்த திரவப்பொருள்களில் அடர்த்தியான பாகம், மேலாக உறைந்து அல்லது திணுங்கிப் படிந்திருக்கும். அதன் கீழ் திணுக்கமற்ற நீர்ப்பொருள் இருக்கும். அரைத்துவைத்த நீர்ப்பொருள் மறந்து விடப்பட்ட நிலையிலும் திரவத்தில் ஏற்படும் மாற்றங்ளால் இத்தகைய கடிய படர்வு மேலெழுந்து நிற்பதுண்டு. பாலைக் காய்ச்சி வைத்துச் சரியான முறையில் தயிருக்கு உறைவு பெறாத பொழுதும் இவ்வாறு மேற்படிவு காணப்படுவதுண்டு.
கல்லெண்ணெய் என்னும் பெட்ரோல் எடுக்குமிடங்களில் முதலில் எடுக்கப்படும் எண்ணெய் தூய்மை அற்றதாக இருக்கும்.
கச்சா என்ற சொல்லில் கச என்ற சொல் அடியாக இருக்கிறது. இது கச என்றும் மாறவல்லது. கச என்பது கய என்றும் மாறவல்லது. கயக்கால் என்பது ஊற்றுக்கண் என்னும் பொருளதாய் உள்ளது. கயம் என்ற சொல் குளம் என்றும் பொருள்படுகிறது.
கச்சா என்பது ஆ விகுதி பெற்று ஊற்று என்னும் பொருளதாகிறது . கசடு என்பது . தூய்மை அற்ற நிலைக்குப் பொருத்தமான சொல். சரியானதன்று என்று அறியக் கிடக்கின்றது.
கசிதல் என்ற சொல் சிற்றளவில் வடிதலைக் குறிக்கிறது. கசி> கச்சி> கச்சா என்று மாறக்கூடிய சொல் இது. இவை எல்லாம் தொடர்புடைய சொற்கள்.
கச்சா என்பது தூய்தாக்கத்திற்கு முந்திய நிலையைக் குறித்தது பொருத்தமே ஆகும்.
இனிக் கடு உச்சம் என்ற சொற்கள் இணைந்து கட்டுச்சம் என்று வந்தால் இது இடைக்குறைந்து கடுச்சம்> கச்சம்> கச்சா என்றாகும். மிக்கத் திணுக்கமான மென்மையாக்க வேண்டிய எண்ணெய், கச்சம்> கச்சா என்றாகும். இஃது இன்னோர் அமைப்பு ஆகும். இச்சொல் பலபிறப்பு உடைத்து என்க.
கச்சா என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக