மொழி நூலறிஞர் சட்டர்ஜியின் ஆய்வுமுடிவின் படி, சமஸ்கிருதம் திராவிடமொழிகளின் ஒலியமைப்பையே உடையது. மேலை நாட்டு மொழிகளில் ஒலியமைப்பை எவ்வகையிலும் ஒத்திருக்கவில்லை. இந்நிலையில் உங்கள் மனத்தில் என்ன கேள்வி எழவேண்டுமென்றால். அது எப்படி ஐரோப்பிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி ஆனது என்பதுதான்.
மேலை நாட்டு மொழிகள் அளவிறந்த இந்தியச் சொற்களைக் கடன்கொண்டுள்ளன. சமஸ்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்றால், கடன் என்பதை நல்லபடியாக மறைத்துவிடலாம். தாய்-சேய் உறவு கற்பித்து, கடன் என்பது பிள்ளைகட்கு பிற்காலத்தில் விட்டுச் செல்லும் விழுநிதியம் போல் ஆகிவிடும்.
தமிழில் போலவே சமஸ்கிருதத்திலும் அ- ஆ; இ- ஈ; உ- ஊ; ஏ; ஐ: ஒ- ஔ என்று வருகிறது .( இடைநின்ற ரு - ரூ - லு, பின் வரும் அம் ஆகியவை தவிர்க்கப்பட்டன. ) இவை தமிழ் நெடுங்கணக்கில் , அம் தவிர, வேறு வரிசையில் வருபவை என்றாலும், மேலை நாட்டு மொழிகளில் வேறிடங்களில் உள்ளவைதாம்.
உரோமன் நெடுங்கணக்கில் ஏ-பி-சி-டி என்றல்லவா வருகின்றன? ஐரோப்பியச் சேய்களெல்லாம் ஏன் சமஸ்கிருதத் தாயைப் பின்பற்றவில்லை? கிடைத்த சொற்களைமட்டும் வாரிச் சுருட்டி வைத்துக்கொண்டார்களோ?
மொழியில் உறவு கொண்டாடி இந்தியாவைத் தம்வசமே வைத்துக்கொள்ளவும் திருட்டை மறைக்கவும் இது ஒருதந்திர நடவடிக்கைதான். மொழியாய்வு முடிபுகள் தங்கிவிட்டன; இந்தியத் துணைக்கண்டம் கைவிட்டுச் சென்ற தோல்வியே அவர்களுக்கு மிஞ்சியது.
தமிழை ஐரோப்பியத்தின் தாய் என்று சொல்லப் போதுமான சொற்கள் கிடைக்கும். முன்பு இணையத்தில் ஒருவர் ஆய்வு செய்து இதை வெளியிட்டிருந்தார். அப்படி இருந்தும் ஏன் தமிழை அணைத்துக்கொள்ளவில்லை? அப்படி அணைத்துக்கொண்டால் , அதில் வெள்ளையர் அரசுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிட்டி யிருக்கக் கூடும் ? தமிழிலிருந்து வெள்ளையருக்கு எந்தப் பயனும் கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.