புதன், 28 செப்டம்பர், 2022

கெளிறும் சனியன் பிடித்த நாரையும்.

கெளிறு என்பது ஒரு  மீன்வகை. இதற்கு ஓர் அழகான தமிழ்ப் பழமொழியும் உண்டு.   சில தலங்கள்  பாடல் பெற்றவை என்று அறியபடுதல் போல  இஃது ஒரு பழமொழி பெற்ற மீன்.  அந்தப் பழமொழி  யாதெனின்:  " சனியன்பிடிச்ச நாரை,  கெளிறைப் பிடித்து விழுங்கினது " என்பதுதான் அது.   கெளிறு என்பது செயப்படுபொருளாய் வருகையில்  "கெளிற்றை" என்று இரட்டித்தல் வேண்டும். ஏன் ஐ விகுதி என்றால் அது விழுங்கியது விழுங்கலாகாத மீனை.  சனியன் பிடித்ததால்தான் அது அம்மீனை விழுங்கிற்று என்பதாம்.

தமிழ்ச் சொற்கள் பிறமொழிக்குச் சென்றால், திரிபு அடைதல் இயல்பு.  அஃது படாமல்,  மலாய் மொழிக்குச் சென்ற இந்த மீன் பெயர்,  "கெலி" என்று மட்டும் வருகிறது.  கெளிறு தொண்டையில் மாட்டிக்கொள்ள,  நாரை படாதபாடெல்லாம் பட்டிருக்கும்.  

நரிக்குக் கொக்குப் பிடிக்கத் தெரியாதது போல, நாரைக்கும் கெளிறு பிடிக்கத் தெரிவதில்லை.  நாய்க்கும் கொசுவைப் பிடிக்கத் தெரிவதில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சனி, 24 செப்டம்பர், 2022

கிழமைகளில் இறைவன் - [சனிக்கிழமைக் கவி]

 பற்றனெங்கு வணங்குகிறான் அங்கெல்லாம் வருவார்

பற்றனெப்போ பணிகின்றான் அப்பொழுதில் உருவாய்

உற்றுவரும்  உளதாகும் ஆற்றலவர் இறைவன்

எற்றோயாம் அவர்பாதம் பணிவின்றி உறைதல்?       1


பற்றன் -  பத்தன் - பக்தன். பற்றுதல் உடையோன்.

எப்போ - எப்போது,  இது கடைக்குறை, இறுதி -து நீங்கியது, பேச்சுவழக்கிலும் உளது.

ஆற்றலவர் - ஆற்றல் அல்லது சக்தி உடையவர்.

எற்றோ - என்ன?

உறைதல் - உலகில் இருத்தல்.


சரிவில்லா  நற்கிழமை  சனிக்கிழமை அலதோ?

புரிவில்லா  நாளதிலே  புலர்வில்லை பொழுதே

நெரிவில்லா நல்வாழ்வு நினைந்தடைக தொழுதே

கரைவில்லா  நலமாகும் கடந்துறைக பழுதே.


சரிவு -  வாழ்க்கை நிலை இறங்குதல், குறைதல்.

அலதோ -  அல்லவோ(பன்மை), அன்றோ.(ஒருமை)

புரிவு -  செயலாற்றுதல்.  முயற்சி

புலர்வில்லை - விடியல் இல்லை

நெரிவு  -  துயர்படுங்காலம்

கரைவு --செய்த முயற்சிகள் வீணாதல்.


அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்னர்

தாங்கி - தமிழ்

 போர்க்களத்தில் தாங்கிப்படை இறக்கப்பட்டு, அது எதிரியின்மேல் தாக்குதல் தொடுத்தது என்று தாளிகைச் செய்தி குறிப்பிடுகிறது. தாங்கி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்ப் பேச்சில் வழங்கிய சொல்லே.

இலக்கியமொழியில் தாங்கி என்ற இகர விகுதியில் முடிந்த சொல்,  தாங்கல் என்ற வடிவில் பதிவு பெற்று, பிங்கலந்தையிலும் குறிக்கப்பெற்றது.

தாங்கு என்பது அதற்கான வினைச்சொல்.

தாங்கு + இ = தாங்கி.

தாங்கு + அல் -=   தாங்கல்.

மனத்தாங்கல் என்ற தொடரும் வழக்கிலுளது.   இதில் உள்ள கருத்து என்னவென்றால்,  வாய்ப்பேச்சு முற்றி ஏசிக்கொண்டார்கள்,  ஆனாலும் கைகலப்பில் ஈடுபடாமல் விலகிக்கொண்டு, ஒருவருக்கொருவர் அதை நினைத்து வருந்திக்கொண்டோ வாய்ப்பேச்சு இன்றியோ இருகின்றனர் என்பது.  இச்சொல் இந்தி மொழியிலும் சென்றேறியுள்ளதென்பது காணலாம்.

நீரைத் தாங்கிக்கொண்டு இருக்கும் பெரிய பாத்திரம் அல்லது மண்குழிவு அல்லது மேல்நிறுவிய பெரிய தக்கர்,  தாங்கி எனவே குறிக்கப்பட்டது. இத்தமிழ்ப் பதம் பிற மாநிலங்களிலும் பரவிப் பின் ஆங்கிலமொழியிலும் கலந்தது.  நீர்ச்சேமிப்புப் பெரும் தாழியும் தாங்கி எனப்படும் - நீரைத் தாங்கிக் கொண்டிருப்பதால். 

இவற்றையும் வாசித்தறிக:

பிறவட்டு:  https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_11.html

பிறமொழிச் சொற்கள் https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_8.html

வீழருவி  https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_10.html

கண்டித்தல் https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_17.htm

Westerners learnt the word "bangle" from Bengal as people there were seen wearing vaLayal ( wristlet) there when the white man first appeared there. Similarly they learnt the word   "thanki" from India. This word by then had spread in several places in India. Thanki was corrupted to tank. The war weapon "tank" looked like water tanks and got its name by this comparison. 

வளையல் என்பதற்கு இன்னொரு பெயர் கைவளை. " கைவளை குலுங்க முத்து மாலை அசைய"  என்று  வருகிறது முத்துத்தாண்டவர் கீர்த்தனையில். (சீர்த்தனை). Also said to be Vengkata kavi. ( did not matter for knowing kaivaLai.. You may check up. I stop here.)


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்