சனி, 9 ஜூலை, 2022

கோவிட்டினாலும் நன்மையா?

 மருந்துகளும் முடிந்துபோச்சு நம்மகடையிலே  ---  அம்மே

மாந்தர்களும் சோர்ந்துபோன கிருமிகளாலே!

இருந்திடப்பலர் நோய்விலக்க மருந்துதேடினார் ----  அதனால்

இன்றுலகின் மருந்தாலைகள் பெருதொகைகண்டார்.

இருந்தவர்கள் இறந்துபோனார் வருந்துகிறோம்நாம் ----ஆனால்

இறந்திடாமல் மருந்துகொண்டு சிறந்தவர்பல்லோர்!

திருந்துதொழில் வளர்ந்தசில நாமுமறிந்தோம்  ---- கண்டாய்

அழிந்தசில தாமுமுண்டிப்  பரந்த ஞாலமே


பல்லோர் -  பலர்

ஞாலம் -  உலகம்

பரந்த -  விரிவான.

திருந்துதொழில் -  நல்ல தொழில்கள்.

கண்டாய் -  நமக்கும் தெரிகிறது என்பது.

தாமுமுண்டிப்  -  தாமும் உண்டு இப் (பரந்த)

முடிந்துபோச்சு -  இங்கு முடிந்தனவே என்பதுதான்  இலக்கணபடி வரும். இது பேச்சுவழக்குத் தழுவி,  போச்சு எனப்பட்டது.




இப்படம் கடையில் மருந்துகள் குறைந்தன என்பதனைக் காட்டுகிறது. தேடிய மருந்து கிட்டவில்லை.

வெள்ளி, 8 ஜூலை, 2022

ஆங்கிலம் " சோரோ" - சோர்வும் சோகமும் பொருள்தொடர்பு

 சோகம் என்ற சொல்லை முன் ஓர் இடுகையில் விளக்கியிருந்தோம். அது சோர்தல் என்ற வினைச்சொல்லைத் தொடர்ந்து எழுந்தது என்பதே அங்குக் கூறப்பட்டதாகும்.  இதை மீண்டும் தெரிந்துகொள்ள 

https://sivamaalaa.blogspot.com/2019/03/blog-post_23.html 

என்னும் இடுகையைக் கண்டு படிக்கவும் ( அல்லது வாய் > வாயிக்கவும்> வாசிக்கவும்).

ஓர் அமங்கலமான நிகழ்வை நாம் கேள்வியுற்ற பொழுது, சோர்வு அடைகிறோம். இது  உடற்சோர்வாகவும் இருக்கலாம்; மனச்சோர்வாகவும் இருக்கலாம், இரண்டும் உள்ள கலவையாகவும் இருக்கலாம். ஏனைக் காரணங்களாலும் இருத்தல் கூடும்.  இந்தச் சோர்வுதான் சோகம்.

சோர் என்ற வினையடிகாகவே  ஆங்கிலச் சொல் அமைகிறது.

சோர் > சோரோ sorrow ஆகிறது.

சோர்க என்பது பழைய செக்சன் மொழியிலும் இருந்ததாக ஐரோபிய ஆய்வாளர் உரைப்பர்.  சமஸ்கிருதத் தொடர்பு வடிவம்  கணடறியப்பட்டுள்ளதாகக் கூறுவர்.

சோர் என்ற வினைச்சொல் தமிழில் உள்ளது. 

கவனித்தல் என்ற பொருளுடைய சமஸ்கிருதச் சொல் நெருக்கமுடையதாக இல்லை.

இதன் தமிழ்த் தொடர்பு தெளிவாய் உள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.




புதன், 6 ஜூலை, 2022

சென்ற இருபது ஆண்டுகளில் உலகத் தலைவர்கள்.

 இருபது நீளாண்டுகள்  --- தம்பீ

இருந்தவர் மறைந்தவர் பற்பலரே,

தருபுதுக்  கருத்துகளால்--- அன்று இத்

தரணியை மலைப்புறச் செய்தனர்காண்!

வருபதி  யாயிருந்தோர்---- நமை

வருந்துமிந்  நோய்நுண்மி பரந்தழிக்க,

ஒருபழி செய்திலரே--- உலகு

ஒன்றித் தழைத்திடச் செய்ததன்றி.


சென்ற இருபது முப்பது ஆண்டுகளில் இருந்த அரசியல் தலைவர்கள் நோய்நுண்மிப் போர் எதையும் செய்யவில்லை.  உலகு தழைக்கப் பல செய்தனர்.  அவர்களைப் பழிசொல்ல ஒன்றுமில்லை. இதைக் கூறுவது இக்கவி.

வருபதி ....  - வந்த  அரசியல் தலைவர்கள்.

கோவிட் பரப்பியதுபோல பழிச்செயல்கள் எதையும் செய்யவில்லை.  ஆகவே இப்போது நிலை  மாறிவிட்டது.