சனி, 2 ஜூலை, 2022

போர்ச் சூழலில் கோவில்கள் தொழுமனைகள்.

 உலகெங்கிலும் பலவித நம்பிக்கைகளும் அவற்றுள் ஒன்றுக்கொன்று இணக்கமின்மையும் புரிதலின்மையும் ஆண்டாண்டாகவே இருந்துள்ளன. இதன்காரணமாக.  போர்களின்போது இடிக்கப்பட்டு அழிந்த கோவில்கள் பல. சண்டைபோட்டுக்கொள்ளுதல் என்பது விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்று எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது.  மனிதன் என்பவன் இதற்கு விதிவிலக்கன்று.

ஆகவே மனிதன் மற்ற உயிரினங்களைவிட மேலானவன், மாற்சாரியங்களை வென்றவன் என்று கூறிவிடமுடியாது.

மனிதன் பல விலங்கியல்புகளின் உறைவிடம்தான்.

புத்தர்போல் பல பெரியவர்கள் அவற்றை வென்று மேலெழுந்திருக்கலாம்.

பாரசீகப் படைகளுக்கும் 'கிரேக்க'ப் படைகளுக்கும் நடந்த ஒரு போரில், ஏதன்ஸ்  நகரத்துப்  பெருங் கோயிலொன்று ( அதினா தேவியின் கோயில் ) அழிக்கப்பட்டது.(ஏறத்தாழ கி.மு. 480 வாக்கில்).  அது இன்று சுற்றுலாக்காரர்கள் பார்த்துப் பெருமிக்கும் ஓர் இடிபாடாக  மாறியுள்ளது அல்லது மாற்றுப்பிறவி மேற்கொண்டுள்ளது. பாரசீகர்களுக்கு அதினாமேல் நம்பிக்கை இல்லை.

விலங்குகளுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை எனலாமா?   மெத்தையைக் கடித்து உதறிவிட்ட ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியை  அதன் இயமான்  அடித்துவிட்டான். அது அடியை வாங்கிக்கொண்டு ஒரு கட்டிலுக்குக் கீழே போய் படுத்துவிட்டது. சற்றுநேரம் கழித்து, அதன் இயமான் அதற்கு த்  தட்டில் உணவிட்டு அழைத்தான்.  அது அவன் மீண்டும் அடிக்கமாட்டன் என்று நம்பி வந்து சாப்பிட்டது எனலாம். 

அவன் நஞ்சைப் பரிமாறவில்லை என்று நம்பித்தானே அது உணவைச் சாப்பிடுகிறது?  ( இன்னும் சரியான உதாரணமாக)  அல்லது மீண்டும் உதைக்கமாட்டான் என்று நம்பித்தானே வந்து சாப்பிடுகிறது? எதாவது இருக்கட்டும்.   எனவே அதற்கும் நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அதன் நம்பிக்கைகள் வேறு வகையின ஆகும். அதன் நம்பிக்கைகள் உயிர்வாழ்வு, உணவு பற்றியவை.  மனிதனின் நம்பிக்கைகள் இந்த எல்லையைக் கடந்தவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

( அதினாவின் பெயரை பின்னொரு நாள் பார்க்கலாம்.)

இதை மறக்கலாகாது, மீண்டும் வருக.

சதுரம் என்ற இருபிறப்பிச் சொல்

சதுரம் என்ற சொல் எப்படிப் பார்த்தாலும் நல்ல தமிழ்ச்சொல். இது ஒரு புனைவுச் சொல்.  இருவகைகளில் நோக்கு மேற்கொண்டு  ஒருங்கிணைத்துச் செய்யப்பட்ட சொல். அந்த இரண்டில் ஒன்றை முன்னர் வெளியிட்டிருந்தோம். இதுவரை மீதமிருந்த இரண்டாவது வகையினை யாம் வெளிப்படுத்தவில்லை. அந்த இரண்டாவதை யாரும் கண்டறிந்தனரா என்று யாம் அறியவில்லை.

மற்ற வலை இடுகைகளை அவ்வளவாகப் படிக்கவும் நேரம் கிட்டவில்லை.

இப்போது அந்த இன்னொரு சொல்லவிழ்ப்பை எழுதுகிறோம்.

ஒரு சதுரம் என்பது நாற்பக்கமும் சரிதூரமாக இருக்கும்.

சரிதூரம் என்ற கூட்டுச்சொல்லை எடுத்து,  அதிலுள்ள ரி என்ற எழுத்தை எடுத்துவிட்டால் சதூரம் என்று வரும்.  அடுத்து தூ என்ற நெடிலைக் குறிலாக்கினால் சதுரம் என்பது விளைவாகும்.  சரி என்பதும் தூரம் என்பதும் தமிழே.

தூரம் என்பதை இந்த இடுகைகள் விளக்குவன.

தூரமும்  தொலைவும்:

https:/https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_38.html

தமிழ் ஆங்கில நெருக்கங்கள்

https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_03.html

தூரம் என்ற சொல்லின் இன்னொரு.....

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_38.html

ஆகவே சதுரம் என்பதை இருவழிப் பொருத்தமும் உடைய சொல் என்போம்.

சரி என்பதற்கு இங்கு விளக்கம் இல்லை என்றால் எழுதுவோம். இன்னும் தேடுதல் முனையவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சரி என்னும் ஒப்புதல் சொல்: https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_8.html


வெள்ளி, 1 ஜூலை, 2022

இலக்கணம் அறிந்த ஐரோப்பியர்கள்

 இலக்கணப் பெரும்புலவரான பவணந்தி முனிவர்  நன்னூல் என்று ஒரு நூலை இயற்றினார். பிற்காலத்தில்  தமிழ்நாட்டுக்கு  வந்த ஐரோப்பியர்கள் சிலர் தமிழ் கற்று  இலக்கணம் அறிந்துகொண்டனர். நன்னூலின் உள்ளுறைவைக் கண்டு அவர்கள் வியந்துபோயினர். அதைச் சில ஐரோப்பிய  மொழிகளில் மொழிபெயர்த்துக்கொண்டு,  அந்த அறிவினால் தம் மொழிகளுக்கும் இலக்கணங்களை அமைத்துக்கொண்டனர். ஐரோப்பியமும் எழுச்சி பெற்றது.

கீழை நாடுகளில் போய் வல்லாதிக்கம் செய்தது மட்டுமின்றி  அவர்களும் மொழியறிஞர்கள் ஆயினர்.

சீனாவுக்குப் போன ஐரோப்பியர்கள் அங்கிருந்து வெடிமருந்துகள் பற்றிய அறிவு அடையப்பெற்றனர். சீனப் பெருநாளில் பேய் ஓட்டுவதற்குச் செய்த வெடிகளிலிருந்து இப்போது அணுகுண்டு வரையிலும் அதற்கு மேலும் போய்விட்டது. இதுபோல அது. அதுவரை அப்போதையச் சீனர்களுக்குப் பேய் எப்படி இருக்கும் என்ற புரிதலோ காட்சியோ இல்லை.  வெள்ளைக்காரன் வந்துபோனபின் பேய் எது என்று கண்டுகொண்டனராம்.

ஆய்வும் அறிவும் பெற்று அவ்வறிவும் மறைந்துவிடாமல் இருக்கப் பதிவுகளும் முதன்மையானவை என்பதை அவர்கள் கீழை நாட்டாருக்கு உணர்த்தினர். வாழ்க.  இனிச் சதுரத்துக்கு இன்னொரு விளக்கத்தை அடுத்த இடுகையில் காண்போம்.