வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

சகடம்

இனி, சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்ய முயல்கையில், இது ச+ கடம் என்றவாறு, புரியாத புதிர்ச்சொல்லாகத் தெரியலாம். சகடம் என்பது மிக்கப் பழமையான சொல் என்று எம் ஆய்வு சொல்கிறது. அது ஏனென்று இவ் வெழுத்தளிப்பின் முடிவில் நல்லபடியாகப் புரிந்துவிடும்.
 பழங்காலத்தில், உருளைகள், வளையங்கள், ரோதைகள், எல்லாம் கண்டிபிடிக்கப்படாத காலப்பகுதி இருந்தது. அது எப்போது என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டிபிடிக்க, அவர்களிடம் நாம் விட்டுவிடுவோம். இங்கு முன் குறித்த சொற்கள் எவ்வாறு அமைந்தவை என்பதும் கேட்டு மகிழற்குரியதே ஆகும். 

அதையும் இவ்விடுகையில் கண்டு மகிழ்வுறுங்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_4.html. 

 சக்கரம் கண்டுபிடிக்குமுன் வண்டிகள் அல்லது ஊர்திகள் சறுக்கியே கொண்டுசெல்லப்பட்டன. பண்டங்களை ஓரிடத்தினின்று இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல உயரத்திலிருந்து தாழ்ந்து செல்லும் நிலப்பகுதிகளே பெரிதும் பயன்பட்டன. ஆற்று ஓட்டமுள்ள இடங்களும் பயன்பட்டன. இவைபோலும் தலங்கள் இல்லாதவிடத்து, யானை, குதிரை, மாடு முதலியவையும் ஆட்களும் தேவையாயிற்று. 

இவற்றுள் சறுக்கலான நிலங்களில் இருந்தவர்கள், சறுக்கி வேண்டிய இடத்தருகில் சென்றனர். சறுக்கு + அருகில் என்ற கருத்துகளே சறுக்கு + அரு + அம் என நின்று, சறுக்கரம் ஆயிற்று.பின் நாளடைவில் இடைக்குறைந்து சக்கரம் ஆனது. சகடம் என்பதும் அவ்வாறு அமைந்த சொல்லே. சறுக்கு + அடு என்ற இரு சொற்கள் இதற்குப் பயன் தருவ(ன)வாயின.  

சறுக்கி அடுப்பது. சறுக்கு + அடம் > சறுக்கடம், இடைக்குறைந்து சகடம் ஆனது. ஊர்தி அமைப்புகளில் வளையத்தைக் கண்டுபிடித்தவனே பெரிய அறிவியலான் ஆவான். அவனை நாம் மறக்காமல் இருக்கவேண்டும். பனியில் சறுக்குவதுபோல் அவ்வளவு எளிதாகத் தரைகளில் சறுக்கமுடிவதில்லை. அந்தக் கடினமே வளைந்த உருளையை அமைக்க அவனுக்குச் சிந்தனை அறிவை வழங்கியதென்பதை மறவாதீர். சறுக்கும் பனிப்பாறைகளிடை உலவியவனாய் அவன் இருந்திருப்பின் உருளை அமைக்க உந்து ஆற்றல் ஏதும் விரைந்து விளைந்திருக்காது என்று அறிக.


 PROOF READ   20062021 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நோய்த்தடை பின்பற்றவில்லையோ

எழுபத்தே ழாயிரம் நோய்த்தொற்று மாண்டோர் 
ஒருபத்து நூறாகும் இன்றே ---- ஒருவருமே 
பின்பற்ற வில்லையோ பீதிக்கோ வித்திதன் 
வன்பற்று வாராமு  றை.




 எழுபத்து ஏழாயிரம் நோய்த்தொற்று --- 
 ( இது கொரனா நோய் தொற்றியோர் எண்ணிக்கை ) 

 ஒரு பத்து நூறாகும் - ஓரிலக்கம் பேர் மாண்டு விட்டனர்  

ஒரு என்பது அசை. இன்றே - இது 28.08.2020 வெளிவந்த கணக்கு 

 பின்பற்ற வில்லையோ - இது அச்சத்துக்கு உரியதாய் 
உள்ளது. தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க
வில்லையோ, அதனால் நோய்த் தொற்று 
மிகுந்துவிட்டதோ என்பது. 

 பீதி - அச்சுறுத்தும். 

 கோவித்து - கோவிட் என்னும் கொரனா

 வன் பற்று = வலிமையாகப் பற்றிக்கொள்ளுதல்.

 format error cannot be rectified.

புதன், 26 ஆகஸ்ட், 2020

அசித்தல் - அயில்தல் ( உண்ணுதல் ) தொடர்பு,

 பாயசம் என்'ற சொல்லில் அசம் என்ற இறுதி முன்

இடுகையில் விளக்கம் கண்டது. அசம் அசித்தல்

என்ற வினையினின்'று விளைந்ததென்றும் 

அறிவுறுத்தப்பெற்றது.


இன்று அசித்தல் என்ற சொல் தோன்றிய விதம்

காண்போம்.


அயில்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்தரும்

பண்டைத் தமிழ்ச் சொல்  அயில்தல் என்பது ஒரு

சுட்டடி வினைச்சொல்.


அயில்தல் என்பதில் அயில் அயி என்று 

கடைக்குறைந்தது.  கடைக்குறைதல் என்றால்

சொல்லின் கடைசி எழுத்து - கெடுதல் அல்லது

விழுதல்.    அவ்வாறு குறைந்து  அயி என்று

நின்ற இப்பழஞ் சொல்,   அசி என்று திரிபுற்று

தல் என்ற் தொழிற்பெயர் விகுதி ஏற்று,  

அசித்தல் ஆயிற்று. ஒரு வினைச்சொல், 

கடைக்குறைந்து, திரிந்து பின் தல் விகுதி

ஏற்று மறுபடியும் வினையாதலுக்கு  நீங்கள்

ஓர் உதாரணம் தேடுங்கள்.  ஒருமாதம்

எடுத்துக்கொள்ளுங்கள்.


கிட்டியவுடன் பின்னூட்டம் இடவும்.


அயில்தல் என்ற வினைக்கு வாக்கியங்கள்:

பால் அயிலுற்ற பின்னர் அவன் நன்கு 

உறங்கினான்.ஒரு பருக்கை பாக்கியின்றி

 சோறு முமுதும்  அயின்றுவிட்டான்.


அயில் >  அயி  ( இது கடைக்குறை).

அயி > அசி   ( இது ய- ச வகைத் திரிபு)

இன்னோர் எடுத்துக்காட்டு:  வாயில் > வாசல்.

யகரம் சகரம் ஆனதுடன், ஆங்கு இகரம் அகரம்

ஆகவும் ஆயிற்று.  யி - ச இது இருமடித் திரிபு.


அயி என்பதுடன் அம் சேர, அது  அசிம் என்று

வருதல் தமிழியல்பு அன்று.  இகரம் கெட்டே அம்

ஏறுமென்பதறிக.


அயிலுதல் -  அயில் என்ற வினை அமைந்த

விதத்தை வேறொரு  சமையத்தில் காண்போம்.


மெய்ப்பு பின்