வியாழன், 19 ஏப்ரல், 2018

மயக்குவது : ம~து > மது.

மதுவைக் குடித்துவிட்டு மயக்கம் போகாமல் ஆடிக்கொண்டு
திரிபவனை " மா-போ" என்று மலாய் மொழி பேசுங்கால் சொல்வர்.
இது "  மயக்கம் போகாதவன் "  அல்லது "  மயங்கிப் போனவன் "
என்ற தொடர்களின் முதலெழுத்துக்கோவை என்பது முன்னர்
இங்கு விளக்கப்பட்டதுண்டு. அதுபின் மாபோக் என்று ஒரு
சொல்லானது. குடிக்காத தமிழன் குடித்துவிட்டு ஆடிய தமிழனைப்
பார்த்து தமிழரல்லாதவரிடைச் செய்த வரணனையிலிருந்து
பெறப்பட்ட வடிவம் என்று சொல்வது சரியானது.

எனினும் ஹவாயி தீவிலும் குடித்துவிட்டு மயங்கி நிற்போரை
" மெதுஒ" என்பராம்.  கிரேக்க மொழி   அகரவரிசைகள் :
மெதுஒ,  மெதுஸ்கோ, மெதுசோஸ், மெதெ என்ற சொற்களைத்
தந்து அவை கிரேக்க விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில்
காணக்கிடப்பனவாய் காட்டும்.  மது -  மெது என்ற சொல்
அணுக்கத்தினால்  மது என்ற குறுக்கச்சொல் மிக்கப்
பழங்காலத்திலே பிற மொழிகட்குத் தாவிவிட்டமை
அறியப்படும்.

மயங்குவது, மயக்குவது என்ற சொற்களின் இடை எழுத்துக்களை
நீக்கிவிட மது என்பதே எஞ்சி நிற்குமென்பதை முன்னரே
எடுத்துக்காட்டியுள்ளோம்.   தமிழ்ச்சொற்களை எடுத்து
இடை நிற்கும் எழுத்துக்களையெல்லாம் அகற்றி முதலையும்
கடைசியையும் இணைத்துப் புதிய சொற்களைப் படைக்கும்
தந்திரத்தை  முன் காலத்திலே அறிந்திருந்தனர் என்பதை
அறியவேண்டும்.

இவையெல்லாம் தமிழர்தம் தொல்பழமையைக் கோடிட்டுக்
காட்டுவனவாகும்.

வில் என்பது வளைவுகுறிக்கும் தமிழ்ச்சொல்; இலத்தீன் மொழி
வில், வில்லா முதலியவும் ஆங்கில் வில்லா வரையும் எல்லாம்
இந்த வில்லென்னும் தமிழ்ச்சொல் வாயிலாகப் போந்தவை
என்பதை இலங்கை கலாநிதி (முனைவர்)  பரமு புஷ்பரட்ணம்  முன்னொருகால்
விளக்கி வரைந்திருந்தது கவனத்திற்குரியது.    உரோம் நாடு
நிறுவப்பட்ட காலை தமிழ் நாட்டிலிருந்து மொழிவல்லோர் சென்று
துணைபுரிந்த வரலாற்றை சென்னைப் பல்கலைகழக வரலாற்றுப்
பேராசிரியர் தம் நூலிற் குறித்திருந்ததை ஈண்டு ஓர் இடுகையில்
குறித்திருந்தோம்.

மயக்குவது >  ம( )து  என்பதை உறுதிசெய்வன இவை.
மது என்பது ஒரு தமிழ் இடைவிழுங்கிய சொல் என்பதறிக.
முன் இடுகை காண்க.

புதன், 18 ஏப்ரல், 2018

அபி என்னும் முன்னொட்டு: அமைப்பு, பொருள், பயன்.



இந்தியத் துணைக் கண்டத்தில் சொற்களைப் புனைந்து மொழிகளைப் பண்படுத்திய பல்வேறு தரப்பினரும் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளனர் என்பது இதுகாறும் நம் இடுகைகளை நன்`கு படித்துவருகிறவர்கள்  அறியக் கிடக்கின்ற ஓருண்மையாகும்.

அந்தத் தந்திரங்கள் யாவை என்பதைப் பட்டியலின்றியே நீங்கள் கண்டின்புறலாம்.

இப்போது ஒரு தந்திரத்தை அறிந்துகொள்வோம்.

அபி என்பது இப்போது ஒரு சொல்லின் முன் வைத்து ஒட்டப்படும் ஒரு துண்டுச்சொல்லாகப் பயன்படுகிறது.   இப்படித் துண்டுச் சொற்களை முன்பக்கம் ஒட்டி ஒரு சொல் சற்று வேறுபட்ட பொருளைக் குறிக்கும்படி செய்துவிடலாம்.

அபி என்பதன் பல்வேறு பொருள்களில்,  அதன் பின் என்பதுமொன்று.

எடுத்துக்காட்டு:   விருத்தி -  அபிவிருத்தி.

விருத்தி என்பதை முதலில் அறிவோம்.

ஒன்று முன் இருந்த நிலைமையைவிட நன்றாகத் தோன்றும்படி செய்து காட்டுவது விருத்தி ஆகும்.

விர் > விரி;
விர் > விரு.

மூலக்கருத்து ஒன்றினை விரிப்பதுவே ஆகும்.  அந்த விரிப்பு,  இடத்தின்  விரிப்பு, வசதியின் விரிப்பு,  இடுபொருள்களின் விரிப்பு.  அழகின் விரிப்பு என்று பலவகைப்படும். விருத்தம் என்பதும் விரிப்பே.  விருந்து என்பதுவும் விரிப்பே.

நம் வீட்டில் எப்போதும்  அம்மா. அப்பா பிள்ளைகள் மட்டும் உண்கிறோம். ஒரு நாள் பக்கத்து வீட்டு நண்பர்களையும் அழைத்து உணவு தந்து மகிழ்த்துவதானால்  ஆக்கும் உணவிலும் உண்ணும் ஆட்களிலும் விரிவு உண்டாகிவிடுதலை நீங்கள் உணரலாம்.  இந்த விரிப்பின் அழைப்புக்கு வந்தவர்களைவிருந்து” “விருந்தினர்என் கிறோம்.

ஒன்றை விருத்தி என்றாலே அது விரிப்பே ஆகும்.   முன்னில்லாத எதுவும் இப்போது புதியதுதான்.

விருத்தியை அறிந்தோம்.   

விரி > விரித்தி >  விருத்தி எனினுமாம்.

ஒரு விருத்தி செய்தபின் அதற்குப் பின்னும் அதிற்பல கொண்டுசேர்த்தலே
அபிவிருத்தி.

அ = அதன்;  பி = பின்.   இவ்விரண்டும் சேர்ந்து அபி என்ற முன்னொட்டாகிச் சொற்கள் அமைந்துள்ளனவென்பதும் காண்க.

அபிவிருத்தி என்பதாவது  :  விருத்திக்குப்பின் வரும் விருத்தி.

பின் வருவது முன் உள்ளதினும் மிகுதியாம் ஆதலால் அபி என்பதற்கு மிகுதிப் பொருளும் வந்தது.

மானம் என்பது அளவு, பெருமை, மதிப்பு .

அபிமானம் என்பது மானத்தின்பின் ஒன்றன்மேல் வரும் பற்றுதல்..

ஒன்றைச் செகுத்தல் என்பது கொல்லுதல். கொன்றபின் செகுத்த பொருட்குச் செய்விக்கப்பெறும் சடங்குகள் பூசனைகள் முதலானவை  “அபி சேகம்”.  இங்கு சேகம் என்பது செகு+அம் = சேகம்.  முதனிலை திரிந்த தொழிற்பெயர். இது பின் ஷேகம் என்றானது. 1

அவி (அவித்தல்)  என்பதும் அபி என்று திரியும்.  இன்னும் பிற பொருளும் தரவுகளும் உள. அவற்றைப் பின்னர் ஒருக்கால் நோக்கிமகிழ்வோம்.

இங்கு சொல்ல வந்தது அபி என்ற முன்னொட்டின் பல பரிமாணங்களில் ஒன்றையே.

-------------------


அடிக்குறிப்பு:

1   அபிசேகம்:  இப்போது இதன் பொருள் மாறிவிட்டது.   உயிர்க்கொலை இல்லாத அபி-சேகத்தில் மலரும் நீரும்  தீயும் மந்திரங்களும் இன்ன பிறவும் பயன்படுத்தப்பெற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  ஆகையால் இற்றை நிகழ்வுகள் கொண்டு இதன் ஆதிப்பொருளை அறிதல் ஆகாது. நடைமுறைக்கேற்ப வேறு சொற்பொருள் காணுதல் புதிய உத்தியாகும்.



செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அம்மாவாசை பேச்சுச்சொல்.



அமாவாசை என்பது முன் விளக்கப்பட்டுள்ளது.
அமாவாசையும் ஓர் அழகிய இரவே ஆகும்.  அன்று நிலவில்லை ஆகையால் வானம் முழுக்கருமை கொள்கிறது.  ஒளியும் ஒளியின்மையும் இயற்கையின் நிலைகள் ஆகும்.  ஒளி சிவமும் இருள் விண்ணும் ஆகும்.  விண்ணு என்பது விட்ணு > விஷ்ணு எனவும் திரியும் என்பதறிக.

அம் =  அழகு. 
அம்மை அழகு.

மா =  கருமை;  அதுவே பெரிது எனவும்  பொருள்தரும்.
வானில் நிலவில்லா இரவில் இருள் பெரிது.   ஆதலின்  காரிருள் ஆகும்.  மா என்பது  சிறந்த பொருளுடன் இங்கு திகழ்கிறது,

வாய் -  இடம்.

ஐ -  விகுதி.


வாயை என்பது வாசை என்று திரியும்

நிலவில்லையேல் வானம் இரவில் ஒரு பெரிய கரிய இடமாகிவிடுகிறது
என்பது பொருள்.

அம்மாவாயை என்பது அம்மாவாசை என்றே சிற்றூர்களில் சொல்லப்படும்.  அது பின் அமாவாசை என்று குறுக்கப்பெற்றுப் பிறமொழிகளிலும்  ஏற்கப்பட்டது.

இன்னும் அம்மா-வாசெ என்றுதான் பேசும்போது சொல்வர்.

அம்மாவாயை >  அம்மாவாசை >  .அமாவாசை > அமாவாஸ்யா 

அன்று வானம் ஓர் அழகிய பெரும் இருளிடம். வேறொன்றும் இல்லை.

ஒளியிலும் அழகு;
இருளிலும் அழகு.

அம்மாவாசையில் நோன்பிருப்பது பண்டைத் தமிழர்
வழக்கம் தான். பிள்ளைப்பேறு கிட்டும் என்று நம்புவர்.