வியாழன், 25 செப்டம்பர், 2014

Noble by birth? An anachronism.

பிரபுக்கள் அவைஅங்கே  நீதி சொல்ல‌
பெரும்புள்ளி அறிஞர்கள் சட்ட மேதை
குறைவற்ற குழுஇயங்கிக் கொண்டி ருந்தார்
கோதிதிலே யாதெனவே கூர்ந்து நோக்கின்
பிரிவுற்ற கிளைகளென ஆட்சி வேண்டும்
பேச்சவைக்குள் நீதித்துறை ஆகா தென்றார் 
அறிவுற்றார் அதுவொன்றும் குற்றம் இல்லை
பிரபுவென்றும் பிறரென்றும் கூறும் வெட்கம்!

பொருள் :

பிரபுக்கள் அவை  House of Lords in UK.

 நீதி சொல்ல‌  to give judgements  ( on appeals:)

கோதிதிலே   குற்றம் இதிலே.;   defects in this constitutional arrangement.

பிரிவுற்ற கிளைகளென ஆட்சி வேண்டும்  refers to the doctrine of Separation of Powers in government.

பேச்சவைக்குள் நீதித்துறை ஆகா தென்றார்  A judicial wing in a debating chamber is not desirable;  it does not accord with modern governmental systems.

பிறர் - this refers to people of non-noble birth.


தமிழாட்சியில் மன்னற் கறிவுரை.




தமிழ் வேந்தர்களும் குறு நில மன்னர்களும்  ஆண்ட போது, புலவர்கட்கு நல்ல மதிப்பு இருந்தது. தகுதியான நேரத்தில் மன்னனைக் காணவும், பேசவும் ஒரு பாடல் மூலம் அவனுக்கு அறிவுரை புகட்டி நல்வழியில் உய்க்கவும் புலவருக்கு ஓர் எழுதப்படாத அதிகாரம் இருந்ததென்றால் அஃது மிகையன்று.

இப்படிச் செயல்படும் புலவருக்கென்று புறப்பொருள் இலக்கணம் பாடாண் திணையில் ஒரு துறையை அமைத்தது. அத்துறைக்கு ஓம்படை என்று பெயராம். ஓம்படையில் புலவன் நேராக அறிவுரை  கூறி அரசன் மனத்தைப் புண் படுத்தாமல், "மன்னா, இத்தகைய சூழலில் நீ இப்படிச் செய்வதுதான் இயல்பு " என்று அழகாக எடுத்துரைப்பார். அவன் அதை உண‌ர்ந்து கொள்வான்.

இதனை: " இன்னது செய்தல் இயல்பென இறைவன்
முன்னின்றறிவன் மொழிதொடர்ந்தன்று" என்கிறது புறப்பொருள் இலக்கணம்.

ஓம்படை  ஓம்பு + அடை.  ஓம்புதல் = காத்தல்; அடை = அடைவித்தல்.
காக்கும் நன்மையின் பக்கமாக மன்னனை ஒப்புவித்தல் என்பதாம்



மன்னன் + கு = மன்னற்கு ,  மன்னனுக்கு ..



புதன், 24 செப்டம்பர், 2014

மழை பாடும் இசை

தடதட வென்றஓசை---எங்கள்
தகர அடுக்களைக் கூரையின்மேல்,
படுகிற நீர்த்துளிகள் ---மழை
பாடும் இசையெனக் கேட்கிறதே!

பகல்தரு வெப்பமதே ‍‍‍--- நீங்கி
பைங்குளிர் வந்து பரவுவதால்,
உகந்திடு சூழலிதே ‍‍‍--- நான்
உறங்கவுய்த் தே நின்று தாலாட்டுதே.


இரவில் யாமமதற் ‍---கப்பால்
இவ்வினி  மைதான் தொடர்ந்திடுமோ?
நிறைவாய் உறங்கியெழ --- எனை
நித்திரைத் தேவியும் முத்தியிட!

கரகர ஓசையிலே!‍‍--- நெடுங்
கடலிடை நீரினில் அமிழ்வதுபோல்
உறுமிது பேரின்பமே --- இந்த‌
உறக்கத் தணைப்பினை என்சொல்வனே!