ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

அயோக்கியன் சொல்

 இன்று அயோக்கியன் என்னும் சொல்லைக் காண்போம்.

அயோக்கியன் என்ற சொன் மக்களிடை  அதிகமாக வழங்கும் சொல்  என்னலாம். ஒருவனைத் திட்டும்போது  அவனை  அயோக்கியன் என்று சொல்வதுண்டு.  இதன் பொருள் நேர்மை அற்றவன் என்பது தான், அயோக்கியத் தனம் என்பதும்  பலவகை நேர்மையற்ற செயல்களையும் குறிக்கும் பொதுப்பொருண்மை வாய்ந்த சொல்லாகும்.  தனம் என்பது இங்கு தன்மை என்ற பொருளைத் தருவது.  தன்மை என்ற சொல் தன் என்ற அடியில் தோன்றியது போலவே தனம் என்ற சொல்லும் இங்கு தன்மை என்ர பொருளில்தான் வழங்குகின்றது. ஒரு மனிதன் தனக்கென்று  சேர்த்துவைத்துள்ள பொருட்களுக்கும்  "தனம்"  என்ற சொல் வருகிறது. அயோக்கியத் தனம் என்ற வழக்கில் வரும் தன்ம் என்பது சேர்த்துவைத்த பொருளினைக் குறிக்கவில்லை.  

இதன் பொருளை அறிய யோக்கியம் என்ற சொல்லினின்று தொடங்கவேண்டும்.  இது நீங்கள் அறிந்ததுதான்.  யோக்கியம் என்ற சொல்  ஓ என்று தொடங்கும் ஓங்கு என்பதிலிருந்து  வருகிறது.  ஓங்கு> ஓக்கு> ஓக்கிய,  என்ற சொல்லில் வரும்  மக்களிடைப் பாராட்டினைப் பெறத் தக்க செயல்தன்மையைக் குறிக்கிறது. ஓங்குதலாவது  உயர்வாகுவது. மேனிலையை அடைவது.

ஓங்கு என்பது இயம்  என்ற பின்னொட்டுச் சேர்ந்த பிறகு  ஓக்கிய என்று வருவது வலித்தல் ஆகும்.   அதாவது வல்லெழுத்துப் பெற்று அமைவது. இந்தச் சொல் பழைய தமிழ் அகரவரிசைகளில் ஓக்கியம் என்றெ இடம்பெற்றிருந்தது.  இவ்வடிவ்மே மூலம்  ஆகும்.

இந்தச் சொல் எதிர்மறையாக உள்ளபடியால்,  சமஸ்கிருதம் என்பீரோ.  அல் என்ற அல்லாமை  குறிக்கும் சொல்தான்,  தன் இறுதி எழுத்தை இழந்து  அ என்று வந்தது.  ஆகவே தமிழிலக்கணப் படி இது  கடைக்குறைதான்.  யோக்கியன் அல்லாதவன் என்பதையே முன்னொட்டு மூலம் அயோக்கியன் என்றாக்கினர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

If u enter compose mode please do not make changes

You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.



வியாழன், 24 ஏப்ரல், 2025

அயலாருடன் ஒத்துப் போதல்

 அயலாருடன் ஒக்க இருப்பவன் அயிர்ப்புக்கு ( சந்தேகத்துக்கு) உரியவனாய்  அறியப் படுதலும் உண்டு.  அதிலும் அயலார் எதிரியாயும் இருந்துவிட்டால் இது உண்மையாகவே ஆகிவிடும் எனலாம்.

அயல் + ஓக்கு+    இ+அன்

(இங்கு அயல் என்பதில் உள்ள லகர ஒ ற்று  வீழ்கிறது.   அய என்றாகி வரு பகவுடன்  இணையும். ஒ க் கு ( த ல் )   என்ற  வினையில் முதனிலை நீ.ண்டு  ஓ க் கு  என்றாகும்.  இயன் - இங்கு உள்ளவன்.

அயலாருடன் ஒத்தவனாய் இங்கு நடப்பவன் என்று இதற்குப் பொருள் உரைக்க. உள்  ஊருக்கு  ஒத்துப் போகாது செல்பவன்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க.




 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

சரண்யா - யா இறுதி

 பெண் மக்கள் பெயர்களில் யா என்னும் இறுதி எவ்வாறு  ஏற்படுகிறது என்று அறிந்து கொள்வோம்.

சரண் என்ற ஆண்மகனின் தாய் அல்லது  "ஆயா" வை சரண் ஆயா என்று அழைப்பீர்கள். இப்படிச் செய்ய மனிதற்கு முயற்சி தேவைப் படுகிறது. இத்தகு கூடுதல் முயற்சிகளைக் குறைத்துக் கொண்டு சொல்ல வருவதை விரைவில் முடிக்க வேண்டியது அன்றாட வாழ்க்கையில்  முதன்மை யாம். செய்யத் தகுந்தவற்றைச் செய்யக் காலம் தாழ்த்தல் கூடாது. அத னால் சொற் சுருக்கம் தேவை யானதே. சொற்கள் சில சுருக்கத்தில் அழகுறுகின்றன.

சரண் ஆயா என்பது சரண்யா என்று சுருங்குகின்றது.

இதுவேபோல் சுகன்யா என்பதும் சுருக்கமே.

நீட்டங்கள் இல்லாமல் சுருக்கங்களே மிக்கு நின்ற மொழிகளும் உலகில் உண்டென்று கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்ந்துகொள்க.





 செய்ய




 அழைக்கும் அழைக்க  முயற்சி தேவைப் படும். இதைத் தெளிவுய்யன்ப