எழுசீர் ஆசிரிய விருத்தம்.
சீர்சால் செயல்சேர் குழும்புகள் இல்லங்கள் வாழ்பவர்
தம்மிடைத் தொண்டியற்றி
ஓர்மால் மனமே இலாதவர் பண்பின ராகவே ஓங்குவர்,
மக்கள் பயன்பெறுவார் ;
நீர்மேல் வருடுநல் தென்றலைப் போல்குளிர் செய்பண்
புதவிகள் செய்வரன்னார்,
பார்ப்பீர் படந்தனை, நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த்
தார்த்திட; வாழ்கவாழ்க..
சொடுக்கிப் படத்தினைப் பாருங்கள்:
செயலவர்களின் தலைமை, திருமதி சுனிதாவை படத்தில் காண்க.
பொருள்:
சேவைக்குழும்புகள்: வீடமைப்புக் கழக இல்லங்களில் சேவைகள் செய்யும் குழும்புகள் ( கம்பெனிகள்). இது செயல்சேர் குழும்புகள் எனப்பட்டது. குழும்பு ="கம்பெனி."
ஓர் மால் மனமே இலாத - ஒருவித மயக்கமும் கொண்ட மனமும் இல்லாத. . மால் என்றால் இங்கு பணி செய்வோமா செய்யாது விடுவோமா என்ற இருமனம் இல்லாத.
பண்பினராகவே ஓங்குவர் - நல்ல குணமுடையோராகவே சிறப்புகள் கொள்வர்.
நீர்மேல் வருடுநல் தென்றலைப் போல்குளிர் செய்பண் புதவிகள் - மனத்தைக் குளிர்வித்து மகிழ்வுறுத்தும் நல்ல உதவிகள்.
செய்வரன்னார் --- அவர்கள் செய்வர்.
நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த் தார்த்திட; வாழ்கவாழ்க.. ---- நல்ல மனத்தோடு வாழ்த்துவீர் என்றபடி. ஆர்த்திட - வாழ்த்தொலி எழுப்ப.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்
இந்த ஆசிரியப்பா வெண்டளையில் பெரிதும் இயலுமாறு மறு வடிவமைக்கப் பட்டது. 06082023 1736