உட்ணம் அதிகமானால் ஒர் காற்றுமட்டையினால் விசிறிக்கொள்ள வேண்டும். அப்போது கொஞ்சம் சுகம் பெறலாம்.
உட்ணம் ( உஷ்ணம் ). இச்சொல்லை அறிய இங்கே செல்லுங்கள்.
1.https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_17.html
2.https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html
உகந்த நல்ல நிலையே சுகமென்பது. இதையறிய இவ்விடத்து ச் செல்க:
https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7.html.
உகத்தல்: உக + அம் = சுக + அம் = சுகம்.
இப்போது விசிறி என்ற சொல்:
வீசு > விசுறு.
இங்கு வீ என்ற நெடில் வி என்று குறுகிற்று. விசு என்றானது, உறு என்ற துணைவினையின் இறுதியை உள்வாங்கி, வீசு + உறு > விசுறு ஆனது .
வீசும் காற்றுமட்டை விசிறி ஆனது ஓர் இகரம் ஏறியபடியால்.
சுருங்கச் சொன்னால்:
வீசு + உறு = விசுறு.
விசிறு என்று சொல்வர். உ- இ திரிபு.
அழகிய வடிவம், இன்புறுத்தும் திரிபுகள்.
மக்கள் நாவு இவ்வாறான சொற்களைப் படைக்கிறது. புலவன் இவ்வாறு படைக்க அறியான். புலவன் என்பவன் கண்டுபிடிப்பாளன் அல்லன்.
இதற்கு ஆலவட்டம் என்ற பெயரும் உண்டு. பெரும்பாலும் அரசவை போலும் இடங்களில் காற்றுவீசப் பயன்படும் அது. அகலம் > ஆல(ம்). இது தாலவட்டம் என்ற திரிவழக்கும் உடையது.
விசிறி என்பது சிவிறி என்றும் எழுத்துமுறைமாற்று அடையும்.
சிவிறுதல் என்று வினையுருத் தோன்றும்.
இன்னொரு காட்டு: மருதை> மதுரை.