சனி, 22 ஜூன், 2019

பாக்டீரியா ( சின்`கோலிகள்)பால் வீழ்ந்து விடாதீர்: கவனம்.

தசைதின்னிச்  சின்`கோலிகள்.

'Flesh-Eating' Bacteria

இதுபற்றிய பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  அவற்றை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.   இப்போது இன்னொன்று.

https://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=222329&ecd=mnl_day_061919 

 

 உருப்பெருக்கியில்   (நுண்பெருக்காடியில் ) நோக்கினால் இந்தச் சின்`கோலிகள்  சின்னக் கோல்கள் போல் காணப்படும்.   ஆதலின் இவற்றுக்கு இப்பெயர் தமிழில் பொருத்தமானது.   இது "பாக்டிரியா" என்னும் ஆங்கிலச் சொல்லின் ஏற்கத் தக்க தமிழாக்கமாகும். பாக்டிரியா எனின் சின்னக் கோல்கள் போல் தோன்றுவன என்பதே பொருளாகும்.

வியாதி என்று தமிழில் வழங்கும் சொல் மிக அருமையாய் அமைந்தது.

விய என்றால் பெரிது என்பது பொருள்.  விய+ ஆதி :  பெரிதாகிக் கொண்டு செல்வது.   அதுதான் இந்த நுண்ம உயிர்களின் நடவடிக்கையால் இப்போது நடைபெற்றுக்கொண்டு உள்ளது காண்பீர்.  வியத்தல் என்பது வினைச்சொல்.  வியந்தேன் -  பெரிதாகக் கண்டேன் அல்லது உணர்ந்தேன் என்பதே பொருள்.   விய -  வியப்பு என்றுமாகும்.

வியனுலகு என்ற குறள் சொற்பயன்பாட்டில் பெரிதான உலகு என்று பொருள்.

பலர் இறந்துபோவதைக் கண்டு கண்டு பழக்கப்பட்ட ஒரு மனிதன், இறப்பது வழக்கமாக நடைபெறுவது என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். இவன் " ஆறிலும் சாவு நூறிலும் சாவு"  என்ற பழமொழியைப் புனைந்ததில் யாதொரு வியப்புமில்லை.  ( பாருங்கள்: வியப்பு என்ற சொல் வந்துவிட்டது ).   பண்டிருந்த கற்காலத்துக்கும் முற்காலத்தில் காடுமலைகளில் வாழ்ந்த மனிதன்,  சாவின் தன்மையைச் சிந்திப்பவனாய்,  ஏதோ பெரிதொன்று நடைபெறுகின்றது என்று நினைத்தான்.  நன்றாக இருந்தவன் கோணல்கோணலாய்ப் பிடித்துக் கைகால் இழுத்து விழுந்து இறக்க,   அதேபோல் நிலைமை பிறருக்கும் பரவி அவர்களும் இறக்க,  சாவுக்களம் விரிவுபடுவதை மனிதன் உணர்ந்தான்.   விய ஆதி  (  பெரிதாக ஆகுதல் ) நடைபெற்றது கண்டான். இதை விளைவிக்கும் அந்த ஏதோ ஒன்றுக்கு வியாதி என்று பெயரிட்டான்.

பரவுவதே வியாதி.  நாளடைவில் அதிகம் பரவாமல் ஒருத்தனைக் கொன்ற நோய்க்கும் வியாதி என்றே கூறப்பட்டது இச்சொல்லின் பொருட்குறுக்கம் ஆகும்.   அடிச்சொல் விய என்பது பெரிதாவது என்று பொருள்தருவதே இதற்குக் காரணம்.

சாவு நிகழ்ந்தே தீருமென்பது மிக்கத் தெளிவான பின்னர்:

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு"

என்பது உலகின் பெருமை என்பது உணரப்பட்டது.

இன்றைய நிலையில் சாவைத் தருவது எது?   அது சாதாரணமானதுதான். எப்படியும் நிகழ்ந்தே தீரும்.  இறைவன் ஒருவனே நித்தியன் என்று நினைத்தான் ,  உணர்ந்தான் மனிதன்.

சா -  சாவை,

தார் =  தருவது.

அண் =   அடுத்து

அம் :  அமைந்தே தீரும் என்னும் பொருளை உணர்த்தும் விகுதி.

தரு : தாராய்,  வரு : வாராய் என்றும் திரியும். இது எதிர்மறைப் பொருளும் தரும்.

வாராய்:  வருவாய்,

வாராய்:  வரமாட்டாய்

இவற்றின் பொருளை வாக்கியத்தை நோக்கி அறிக.

சாவு என்பது சாய்தல் என்னும் அடிச்சொல்லின் பொருள் வளர்ச்சி ஆகும்.

சின்`கோலிகள் விளைப்பது விய ஆதி ஆகிய வியாதிதான். வியாதியால் மரணம் ஏற்படுவதும் சாதாரண நிகழ்வுதான் .  சா- சாவை தார் ( தரு) தருகின்ற அண் - அடுத்த அம்: நிகழ்வுதான்.  அல்லது சாய்வு தரும் நிகழ்வுதான்.  நடந்தே தீர்வது.

இவைகளெல்லாம் எப்போதும் ஆவது என்று 

வேதம் உணர்ந்தார் வியக்காமல் உரைப்பினும்---  தம் மக்களுக்குச்

சாதம்  அளிக்கும் உயர்ந்த உழைபாளிகள் கவனம் கொள்வதே கருதத் தக்கது ஆகும்.






வெள்ளி, 21 ஜூன், 2019

மாது - தவறான சொல்!

மாது என்ற சொல் பேச்சு வழக்கில் அவ்வளவாக வருவதில்லை. அதற்குப் பதிலாகப் பெண்பிள்ளை என்ற சொல்லின் திரிந்த வடிவத்தையே கையாள்கின்றனர்.

பெண் என்ற சொல் பொம் என்று திரிவது வேடிக்கைதான்.   எகரத் தொடக்கம் ஒகரமாகவும் ணகர ஒற்று மகர ஒற்றாகவும் மாறிவிடும் நிலையில் திரிபுகளுக்குப் பெயர்போனவர்கள் தமிழ்ப்பேசுவோர் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர் தம் நெறியாம்.

இலக்கணப் படி அம்மாவை அவள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.   உயர்வுப் பன்மையில்  அவர் என்று  சொல்லலாம்.   ஆனால் பலர் அது என்றும் சொல்வதுண்டு.   அம்மா அஃறிணை ஆக்கப்பட்டாலும்,  அது என்பதன் உள்நோக்கம் பணிவு குறித்தலே ஆகும்.

அருகில் நிற்கும் அம்மாவைக் குறிக்க:

என் அம்மா அது.....

என்பதுமுண்டு.  நாளடைவில் அம்மா போலும் உயர்வுக்குரியவர்களையும் என் என்ற சொல்லைத் தவிர்த்து   "  அம்மா அது "   அல்லது  "  மா து " என்றனர்.

அம்மா என்ற விளி வடிவச் சொல்லின்  இறுதி:  மா.
அது என்பதன் இறுதி:   து.   து என்பதோ அஃறிணை விகுதி.

மா+ து  =   மாது;   பெண் என்ற பொதுப்பொருளில் இப்போது வழங்குகிறது.

மாது என்பதில் து என்பதாம்  அஃறிணை விகுதியை வைத்துக்கொண்டவாறே,   அர் விகுதிப் பன்மையும் பெற்று மாதர்  என்று ஆகிவிடுகிறது.

மாதர்தம்மை இழிவு செய்யும் என்ற வரி வரும் பாரதி பாடலில்  இஃது  உயர்வான பொருளுடன் மிளிர்கின்றது.

மாது என்பது ஒரு பகவொட்டுச் சொல்  அல்லது போர்மென்டோ ஆகும்.  இதன் ஆதிப் பொருள்  அது அம்மா என்ற பணிவான குறிப்பே.   உயர் வினால் அஃறிணை வடிவில் அமைந்துவிட்ட வழுவமைதிச் சொல் ஆகும்.

து விகுதி பெற்ற அஃறிணைச் சொற்கள் பல. இச்சொற்களில் திணை வலிமை பெறவில்லை.   கைது என்பது கையகப் படுதல் என்னும் தொழிலைக் குறித்து நிற்கின்றது.    விழுது என்பது சினைப் பெயர்.

பல சொற்களில் இது அது என்பன சொல்லாக்க இடைநிலையாக வரும்.  எடுத்துக்காட்டு:

பருவதம் :   பரு+  அது + அம் =  பருவதம் > பர்வதம்.   பருமை உடையதாகிய மலை.

இப்போது இன்னும் படைக்கப்படாத இரண்டு புதிய சொற்களை மேற்கண்ட பாணியிலே அமைத்துக் காண்போம்.

அம்மா அவள் >   மா + அள்=    மாவள்.
அப்பா அவன் >  பா + அன் =  பாவன்.

அப்பா அம்மா இவர்களை அவன் அவள் எனல் ஏற்றுக்கொள்ள இயலாதவை,
இற்றை நிலையில்.  இருப்பினும் அமைத்துப் பார்த்தோம்.


அறிந்து மகிழ்க.

திருத்தம் வேண்டின் பின்.

புதன், 19 ஜூன், 2019

மோடியை ஏசித் தோற்றவர்கள்.

எதிர்க்கட்சிகள் மடமை.

மோடியே மோடியென்று முக்காலும் ஏசினர்காண்
மோடியே வேண்டுமென்று நாடினரே-----நாடுடையோர்!
ஓரள வின்றியே ஊடுசென்றால் கேடுறுமே
நீரளவு நீந்துக கண்டு .