சளியும் பிடித்தால் அளியேனோ யானே
தலைகனக்க மூக்கே தடைக்கும் ---- பலதுன்பம்!
கோலெழுதப் பேரசதி கொக்கொக் கிருமலுமாம்
வாலயர்ந்த நாய்போல் வரும்.
அம்மாவும் நோய்மனையில் ; அங்கும்போய்ப் பார்த்திட்டால்
சும்மா இருக்கச் சுருதியும் ------ இம்மியுமே
விம்மாதே; யாண்டும்தான் வீழ்ந்துறங்கி வாண்டைப்போல்
கும்மாளம் இல்லாக் குலை.
இதன் பொருள் :
பாட்டு 1
யானே அளியேனோ சளியும் பிடித்தால் = நீர்க்கோவை ஏற்பட்டு
விட்டால் நான் பரிதாபத்துக்கு உரியவள் ; ஓ அசை .
தலை கனக்க மூக்கே தடைக்கும் - தலை கனமாகும் , மூச்சு
அடைக்கும்;
பல துன்பம் - இவ்வாறு பல துன்பங்கள் .
கோலெழுதப் பேரசதி - எழுது கோலால் எழுதவும் பெரிய
அயர்வு ஆகும்.
கொக்கொக் கிருமாலுமாம் - இவ் வொலிக்குறிப்புடன் இருமலும்
உண்டாகும் .
வாலயர்ந்த நாய் போல் வரும் : வாலை ஆட்ட ஆற்றலற்ற
நாய் போல என்னுடல் ஆகும்.
பாட்டு 2
அம்மாவும் நோய்மனையில் - என் தாயும் மருத்துவ மனையில்
உள்ளார்.
அங்கும் போய்ப் பார்த்திட்டால் - என் நோய் நிலையில் அங்கும்
சென்று பார்க்குங்கால்;
சும்மா இருக்க - அந்நோய் மனையில் ஏதும் செய்யாமல் இருந்தால்;;
சுருதியும் இம்மியுமே விம்மாதே - எனது சுருதி கொஞ்சமும்
எழமாட்டாதே; மனம் முற்படுதலும் செயல்பாடும் கலந்து
மேலுறமாட்டதே என்பது. யாண்டும் - எப்போதும்;
கும்மாளம் இல்லா - ஓடியாடுதல் இல்லாத;
வாண்டைப்போல் வீழ்ந்துறங்கி - ஒரு சிறுபிள்ளைபோல் விழுந்து
தூங்கி;
குலை - குலைந்துபோதல் நடந்தேறும் என்றவாறு.
இவை முன் வரைந்த பொருட்குறிப்புகள்:
அளியேனோ - பரிதாபத்துக்குரியவள் நானோ.
மூக்கு (ஆகுபெயர் ) - மூச்சு
தடைக்கும் - (மூச்சைத் ) தடுக்கும் ( அடைக்கும் )
கோலெழுத - கோலால் எழுத; பேனா எடுத்து எழுத.
(வேற்றுமைத் தொகை ).
பேரசதி : பெரிய உடல் சுணக்கம்.
கொக்கொக்கு - இருமல் ஒலிக்குறிப்பு.
வாலயர்ந்த நாய் - வாலை ஆட்டச் சக்தியில்லா நாய்.
நோய்மனை - மருத்துவமனை-
சுருதியும் விம்மாதே - உடல் எழுச்சி குன்றும், இசையில்
சுருதி இன்மை போல. சும்மா - எதுவும் உதவாமல் .
( நோய்வாய்ப்பட்ட அம்மாவைப் பார்க்கப்போனால்
சும்மா இருக்கமுடியாது. சுருதி இல்லா இசையாய் அங்கு
இருக்கலாகாது.)
இம்மியும் - கொஞ்சமும் . விம்மாதே == எழாதே
வாண்டு - சிறுபிள்ளை.
கும்மாளம் - ஓடியாடித் திரிவது
குலை = குலைதல், நடுக்கம்.
will review.
We have used fonts of only one size. We do not know why smaller and bigger sized fonts
have appeared in the finished output. We are not able to change or ameliorate this situation.
We are sorry.