வியாழன், 17 செப்டம்பர், 2015

அட்டணம் "தளவாடம் "


அட்டணம்  இச்சொல்  தமிழில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை, சங்கதத்தில் இது போர்க் கருவிகளைக் குறிக்கிறது.

அடு+ அணம்  =  அட்டணம்    ஆகும்,

அடுதல் -  பல பொருள் உள்ள சொல்.  சமைத்தல்,  நெருப்பில் இட்டுச்  சூடேற்றுதல்   என்பவை மட்டுமின்றி,    எதிரியை வெல்லுதலும்,  வருத்துதலும்  இதன் பொருள்.

போர்த் தளவாடங்கள்  வெல்லவும் வருத்தவும் உதவும் கருவிகள் ஆதலின் அட்டணம்  இப்பொருளைப் பெற்றது.

அடுதல்  வினைச்சொல்.  அணம்  என்பது தொழிற்பெயர் விகுதி

அடுதல்  என்ற வினை   முதனிலை  நீண்டு  ஆடு என்று தொழிற்பெயராகும்

தளவாடம் :.

தளத்தில்   வைக்கப்பட்டிருக்கும்  கருவிகள் அல்லது பொருட்களுக்கு  "தளவாடம் " என்பர்.

தளம் + ஆடு+ அம்  > தளவாடம் .     வகர உடம்படுமெய்  பெற்ற சொல். முதலில்  போர்க்கருவிகள் என்று பொருள்தந்த இத்தொடர்,  இப்போது பொதுப்பொருளில்  "உதவும் பொருட்கள் "  என்று  பொருள் விரிவு கண்டுள்ளது..


புதன், 16 செப்டம்பர், 2015

Protests in Malaysia

Suffix aNam அணம்

அணம் என்ற   தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம்.  வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல்  உ ண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும்  சென்று ஆட்சி பெற்றுள்ளன.

ப ட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
(சாரணம்)>   சாரணர்

தோரணம்
வாரணம்

என்று அவை பலவாம்.

இங்கு  அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.

அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.   

அ >  அண்.

அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்

அண் > அண்முதல்.  அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.

அண் >  அணைத்தல்.
அண் >  அணை>    அணைக்கட்டு.
அண் > அணி >   அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.

சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன.  சேலை இடையையும் கால்களையும்  அணைத்து நிற்பது. = >  >

கருவி  >   செய்தற்கு உதவும் பொருள்.
கரு    செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.

கரு+ அணம் =  கார்+ அணம் =  காரணம்.1
கரு+ இயம் > கார்+இயம் =  காரியம்.

வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.

செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.

அணம்  -    அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.

அண்+ அம் =   அணம்.

இங்ஙனம்  அமைந்த்ததுவே  அணம் விகுதி.



--------------------------------------------------------------------------------------
1.  Expounded by Dr  G Devaneyap Pavanar.