புதன், 18 மார்ச், 2015

first the mantras then the language

In "Rules without Meaning" Staal controversially suggested that mantras "predate language in the development of man in a chronological sense". He pointed out that there is evidence that ritual existed before language, and argued that syntax was influenced by ritual.
Wikipaedia.

மந்திரங்களே  முதலில் தோன்றின;  பின்னரே மொழி  அமைந்து அது பண்படுத்தப் பட்டது  என்றார் அறிஞர் ஸ்டால்,  இந்தப் பேராசிரியரின் கருத்து  ஒரு சில மொழிகட்குப் பொருந்துவதே ஆகும் . இவற்றுள்ளும்  சமஸ்கிருத மொழிக்கு  அது முற்றிலும் பொருத்தமானது  ஆகும் . .

மந்திரங்கள்  சொல்லிப் பிழைப்பவர்  எடுத்த எடுப்பிலேயே  கோட்டை கொத்தளங்கள்  அரண்மனைகள் முதலிய வற்றுக்குள்  நுழைந்து மேலாண்மை செலுத்தினர் என்று நினைப்பது  உலக இயல்பு  அறியாத முட்டாள்தனமாகும் .  பல மரத்தடிகளில் தங்கி அலைந்து திரிந்து  எப்படியோ ஓர்  அரசனைச் சந்திக்க இயலும்போதுதான்  மந்திர மொழிஞருக்கு   ஆகூழ்  ( அதிருட்டம்)   அடித்துவிட்டது என்று பொருள் . அரசனிடம் மந்திரம்  படித்து  அரசனுக்கும்  அதன்பின்  நல்லது நடந்து  மந்திரம் சொல்பவன்பால் பற்றுமிகும்போதுதான்  சீரான நிலை ஏற்படுகின்றது.

இதன்பின்  பல்வேறு   மந்திரங்களையும்  இணைத்து நோக்கி  பாணனாகிய பாணினி போல் ஒரு படித்தவன்  சில இலக்கண விதிகளையாவது  இயற்றித் தரும்போதுதான்  மொழியானது  அமைப்பு நிலையை அடைகின்றது/  இப்படி  அமைந்ததுதான் சமஸ்கிருத மொழியாகும் 

பேச்சில்  வளர்ந்த மொழிக்கும்  மந்திரங்களிலிருந்து  அ மைந்த மொழிக்கும் வரலாறு  வேறுபடும்   இதைத்தான் ஸ்டால்  எடுத்துச் சொன்னார் ;   ஆனால்  விளக்கம்  கேட்டோர்  அதனை நன்கு  புரிந்துகொள்ளவில்லை  போலு ம்.  அதனால்  அப்போது  அதைப் பலர் ஒத்துக்கொள்ளவில்லை .  

மந்திரத்தில்  விளைந்த மொழியே  இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம்  தாயாகிவிட்டது  என்பதை  மேலையர் எப்படி  ஏற்றுகொள்வார்கள் ? அவர்கள்  அதை  ஏற்காதது  எதிர்பார்ப்புக்குரியதே.

மந்திரப் பாடல்கள்  திரட்டப்படும் போது, விடப்பட்டவையும்  இறந்தவையும் பல என்று ஆய்வாளர்கள்  சிலர் சொல்வர்.  எஞ்சியவையே  இருக்குவேதம் ஆயிற்று.

இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் பல்வேறு சாதியினர்.  எந்தெந்தச் சாதியினர் என்றோ  என்னென்ன மொழிகள்/ கிளைமொழிகள்  பேசினர்  என்றோ  தெரியவில்லை. மந்திரம் சொல்வதில் வெளியிலிருந்து வந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டனர் என்று கூற எந்த ஆதாரமும்  இல்லை. ஆனால் அவர்களிடம் வழங்கிய சொற்கள் பலவற்றைக்கொண்டும்  பாகத மற்றும் திராவிட, முண்டா மொழிகளின் சொற்களைக்கொண்டும்  ஒரு புதிய மொழி உண்டாக்கிப்   பல சொற்கள் தொலைந்துவிடாமல் காப்பாற்றப் பட்டன.  அதுவே  சமஸ்கிருதமாகும். 

பாணினியின் அஷ்டாத்தியாயி  என்றால்  எட்டு அத்தியாயங்கள் உடைய நூல் என்று பொருள்.  அட்ட என்பது  எட்டு என்பதன் திரிபு,   ஆங்க்கிலத்தில்கூட எய்ட் என்ப து எட்டு என்று பொருள்   
இலத்தீன்  "அக்டோ"  = எட்டு.   ஒவ்வொரு அத்தியாயமும்  அற்று,  அதன்பின் வருவதனோடு  இயைகின்றது.   அற்று என்பது  அத்து  என்று திரியும்.  பேச்சுத் திரிபு .அத்து+இயை +அம்  = அத்தியையம்  > அத்தியாயம் ஆனது.  இச்சொல்லின் தமிழின் பங்கு காணலாம் -  அது பெயரிலேயே வந்துவிட்டது.  பாண்> பாணன்;    பாண் >பாணினி..  பாண் >பாணர். அப்போது திராவிடர்கள்  நாவலந்தீவு  முழுமையும் பரவிக்கிடந்த காலம்.  வந்தவர்கள்  பல திராவிடச் சொற்களையும் முண்டா மொழிச் சொற்களையும்   ஆஃப்ரோ ஆசிய மொழிச் சொற்களையும்  கற்றுக்கொண்டு பயன்படுத்தினர்.  பின் இவையெல்லாம்  பண்படுத்தப்பட்டதே சமஸ்கிருதமாகும். 
We are just telling you how the terms were formed.  Whether we interpret it in this way or in any other way, you will be still using them  when referring to them.. Therefore your usage or otherwise is not affected by our interpretation. We have served only to make things clearer to you.



செவ்வாய், 17 மார்ச், 2015

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய சொற்கள்

சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை,  ஸ் , ஷ்   ( இன்னும் இவைபோல்வன ) முதலான எழுத்துக்கள் இல்லாதசொல் நாவால் ஒலிக்க ஓர்  அழகில்லாத சொல் என்று சொன்னால்   மிகையன்று.

கா என்றால்  எவள் என்பது. எவளுக்கு  என்று கேட்க வேண்டின் ஒருமையில்  "கஸ்யை " ?  என்று திரிந்துவிடுகிறது. எவளிடமிருந்து  என்று  கேட்க "கஸ்யா "?   என்று சொல் மாறுகிறது.

எவன் என்று பொருள் படும் "க :" என்னும்  சொல்,  பன்மையில் "எவர்களுடைய   "  என்று கேட்க "கேஷாம் "  என்று  மாறும்.

அம்மொழியின் இயல்பு ,  அடிச்சொல்லில்   ஸ் , ஷ்  இல்லாதபோதும்  இப்படி
மாறுகின்றன.

கடு + அம்  = கட்டம் என்பது  கஷ்டம் என்றும்   மாறியதில்  வியப்பென்ன?
இடு + அம்  = இட்டம்  (மனத்தை  இடுவது )  இஷ்டம் ஆயிற்றே ! இப்படிப்  பன்னூறு .
ஹா  ஹா ஹா என்ற சிரிப்பொலியிலிருந்து  ஒரு சொல் :  ஹா+ அம் >  ஹாயம்  என்று அமையவில்லை . ஹாஸ்யம்  என்று நடு "ஸ் " தோன்றியது.

பழம் என்பது தமிழ் . இது  நேரடியாகவோ  மற்ற பாகதங்கள் மூலமாகவோ  சமஸ்கிருதம் சென்றது ., ஹ்மெர்  மொழியில்  ப்ஹ்லே  ஆனது . வடமொழியில் "ப்ஹல "  ஆனது.  சில வேளைகளில் இடைப்பட்ட மொழியில்
சென்றேறுகையில் தமிழில் இல்லாத ஓர்  ஒலி  ஒட்டிக்கொள்ளும். பின் அந்தச் சொல் தன்  பயணம் தொடர்ந்து வடமொழி புகுதல் ஆய்வில் புலப்படும் . பழம் தமிழா அன்றா ?   மேலை (German Italian French etc ) இந்தோ ஐரோப்பியத்தில்  பழம் பலம் ஆகியவை இல்லை.  ஆதலின் அது திராவிடச் சொல்  = தமிழாகும்.

சம்ஸ்கிருதம் மின்னுவது இத்தகைய ஒலிகளால்தாம்.  வேற்றுச்சொல் எடுத்தாலும்  ஒரு ஸ் போடவேண்டும் .

இறைவர் >  இ - (ஷ்) -வர்  > ஈஷ்வர் >  ஈஸ்வர்  பின் ஈசுவரன் என்று தமிழுக்கே திரும்பியது . ஒவ்வொரு மொழியின் இயல்பும் அறியவேண்டும்.

ஊர் சுற்றி அழகு மாவு பூசிய  சொற்கள்  இங்கு சில .


    

திங்கள், 16 மார்ச், 2015

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்

தொல்காப்பியத்தில் இடைசெருகல்கள் உள்ளன.  ஆனால்  அவை எவையெவை என அறிஞர் இன்னும் முடிவு செய்திலர். இச்செருகல்கள் தமிழுக்குப் புறம்பான கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பன வாதலால்,  அறிஞர் இவ்வினையில் ஈடுபட்டிலர். எனவே  காலக் கணக்குப் போடுகையில் "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ " என்பதுபோன்ற நூற்பாக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்று அறிஞர் கொள்கை வகுக்கின்றனர்.  அங்ஙனமாயின் தொல்காப்பியரின் காலம் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.  "வடவெழுத்து ஒரீஇ"  என்பதனால் இந் நூற்பா எழுந்த காலத்தில் வடமொழிக்கு எழுத்து ஏற்பட்டுவிட்டதென்று பொருள்.

மேலும் இந் நூற்பா  சொல், கிளவி, சொல் என்று அதே பொருள் உள்ள சொற்களை, மும்முறை பயன்படுத்தியுள்ளது.   எழுத்து என்ற சொல்லும் இரண்டு முறை வந்துள்ளது.  தொல்காப்பியரே இவ்வரிகளை வடித்திருப்பின் வேறுவிதமாகப் பாடியிருப்பாரோ என்பது ஆய்வுக்குரியது. 

வடசொல் வரவும் கடிவரை இலவே
வடவெழுத் தொரீ இய காலை யான.

அல்லது

வடசொல் வரினும் கடிவரை கொள்ளார்
வடவெழுத் தொரீ இய முடிபி லான

என்பதுபோல் வந்திருந்தால் எதுகை மோனைகள் உளவாதலுடன்,  அதேபொருட் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தல் இல்லாமல் நூற்பா இயன்றிருக்கும்.    ஆதலினாலும் இஃது ஐயத்திற்குரிய தொல்காப்பிய நூற்பா ஆகும். தொல்காப்பிய நூற்பாவெல்லாம் தொல்காப்பியர் நூற்பாவல்ல.