ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இமயவரம்பனைப் புகழ்தல்


1
வெயில் துகள்  அனைத்தும்
மாற்றோர்  தேஎத்து மாறிய  வினையே
கண்ணின் உவந்து  நெஞ்சு  அவிழ்பு அறியா
நண்ணார்  தேஎத்தும் பொய்ப்பு  அறியலனே
படியோர்த் தேய்த்து  வடிமணி  இரட்டும்
கடாஅ  யானை  கண நிரை   அலற
 வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ்   நிறீஇ.... (யினான் )


வெ யில் துகள்  அனைத்தும்  ==
வெயிலும்  காற்றில் அடிக்கும்  தூசியும் கூட

மாற்றோர்  தேஎத்து மாறிய  வினையே  ==
  பகைவர் தேசத்தில்  மாறி  அமைந்து  விட்டன.;

கண்ணின் உவந்து =  கண்ணால் பார்த்து விரும்பி
நெஞ்சு  அவிழ்பு அறியா  =  மனம் திறந்து  இரங்குதல்  தெரியாத ;

நண்ணார்  தேஎத்தும் = ( அப் )பகைவர் நாட்டிலும்

பொய்ப்பு  அறியலனே -  ஏமாற்றுதல்  அறிய  மாட்டான் ;
(அங்கும்  கொடை  நிகழ்த்தினான் வேந்தன்.)

படியோர்த் தேய்த்து  = அடங்காத பகைவரை அழித்து;
வடிமணி  இரட்டும் -  (யானை )  மணிகள் இருவிதமாய் ஒலிக்கும்;
கடா யானை  =  ஆண்  யானைகள் ;  கண நிரை   அலற = படைத் தொகுதி அலறும்படியாக;   வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து =  மிக விரிந்த பெரிய நிலப் பரப்பினை வென்று ;
புலவர் ஏத்த ஓங்கு புகழ்   நிறீஇ  = புலவர் வாழ்த்தும்படியான மிகப் பெரும் புகழை நிலை நாட்டி;(னான் )


2 அட்டு  மலர் மார்பன்;
எமர்க்கும் பிறர்க்கும்  யாவர்  ஆயினும் 
பரிசில்  மாக்கள்   வல்லார்  ஆயினும்
 கொடைக் கடன் அமர்ந்த  கோடா நெஞ்சினன்;
 மன்னுயிர்  அழிய  யாண்டுபல மாறி 
தண்ணியல்  எழிலி தலையாது ஆயினும் 
வயிறு பசி கூர  ஈயலன்;
வயிறு மாசு  இலீ இயர் ,  அவனீன்ற  தாயே. 


அட்டு  மலர் மார்பன்;==

மலர்   சொரிந்த மார்பை  உடையோன்;
எமர்க்கும் பிறர்க்கும்  யாவர்  ஆயினும்==
நம்மவர்க்கும் அடுத்துள்ளோர்க்கும்    மற்ற எவராயினும்
பரிசில்  மாக்கள்   வல்லார்  ஆயினும்==
புலவர்போல பரிசில் வேண்டி வருவோர்  எத்தகையோர் ஆயினும்  
 கொடைக் கடன் அமர்ந்த  கோடா நெஞ்சினன்;==
ஈவது கடமை என்ற உணர்வு  குடிகொண்ட நேர்மையான நெஞ்சினன் 
மன்னுயிர்  அழிய  யாண்டுபல மாறி==
உலகின் உயிர்கள் அழிவு எய்தி பல ஆண்டுகள் சென்றும்
தண்ணியல்  எழிலி தலையாது ஆயினும்==
தண்மையான  மேகங்கள் மழை பெய்யாது பொய்த்துவிடினும் 
வயிறு பசி கூர  ஈயலன்==;
வயிறு  மீண்டும் பசிக்க ஈதல்  செய்பவன் அல்லன்;(  என்றுமே  இனிப் பசி  வராதபடி ஈபவன்; )
வயிறு மாசு  இலீ இயர் ,  அவனீன்ற  தாயே==.
காரணம், அவனை ஈன்ற தாய்  வயிற்றில்  மாசு இல்லாதவள் 


பதிற்றுப் பத்து ,  இரண்டாம் பத்தின் இறுதிப் பாடற் பகுதி. வரிகள்  6  முதல்  14 வரை;   வரி   20 முதல் 27 வரை.  பாடிய புவலர் பெருமான் குமட்டூர் கண்ணனார். படப் பெற்ற மன்னன்  இமய வரம்பன் நெடுஞ்ச்சேரலாதன். இவன் பெரும் போர் வீரன் என்பது,  இவன் புகழப்பெற்ற சொற்களினால்  அறியலாம்.

புறப்பொருளில்  இஃது  இயன்மொழி வாழ்த்து.  ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமுமாக  வந்துள்ளது.  செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் ஆகும்.

புலவர் பெற்ற பரிசு: 500 ஊர்கள்.  38 ஆண்டுகட்கு  அரசின்  தென்னாட்டு வரவில் பாதி.

இந்தப் பாடல் பாடிப் புலவர் ஒரு குறு நில  மன்னராகவே ஆகிவிட்டார் எனில் மிகையாகாது.

இவ் வேந்தன் பெருங் கொடையாளி . ஒரு ஊழியே மாறி  மழையே இல்லாமல் போனாலும் கொடையே  அவன் நெஞ்சத்து  முன் நிற்பது. 




சனி, 2 ஆகஸ்ட், 2014

583 தத்தெடுத்த அதிகாரி



http://tamil.thehindu.com/tamilnadu/

'19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை'

1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன். 

சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம். 

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.
கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான். 

எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 

எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).
__._,_.___

உங்கள் நாட்டுத் திறன்

அவர் வெளி நாட்டு வேலைக்காரர்.
இங்கு வந்து  குளம்பி (காபி)  போடுகிறார்!
தாகம் எடுத்த  அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?

அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின்  திறமை.

ஒரு மருத்துவ  மனையில்
வெளி  நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?